கிரென்னரைட்டு

தெலூரைடு கனிமம்

கிரென்னரைட்டு (Krennerite) என்பது AuTe2 to Au3AgTe8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நேர்ச்சாய்சதுரத் திண்மமாக காணப்படும் இக்கனிமம் ஒரு தங்க தெலூரைடு கனிமமாகும். இதன் கட்டமைப்பில் மாறுபட்ட அளவு வெள்ளியும் கொண்டிருக்கும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு AuTe2 ஆகும். ஆனால் தங்கத்துடன் 24% வரை வெள்ளி கலந்திருக்கும் மாதிரி கனிமம் கண்டறியப்பட்டது ([Au0.77Ag0.24]Te2). வேதியியல் ரீதியாக ஒத்த தங்கம்-வெள்ளி தெலூரைடுகளான கேலவெரைட்டு மற்றும் சில்வணைட்டு ஆகிய இரண்டும் ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் உள்ளன, அதேசமயம் கிரென்னரைட்டு நேர்ச்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பில் உள்ளது.

கிரென்னரைட்டு
Krennerite
கொலராடோவில் கிடைத்த கிரென்னரைட்டு
பொதுவானாவை
வகைதெலூரைடு கனிமம்
வேதி வாய்பாடுAuTe2 to Au3AgTe8
இனங்காணல்
நிறம்வெள்ளி வெண்மை முதல் வெண்கல மஞ்சள் வரை – பாலேடு வெண்மை
படிக இயல்புபாரிய பட்டகப் படிகங்கள்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு{001} இல் சரி பிளவு
முறிவுதுணைசங்குருவம் – ஒழுங்கற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்பச்சையும் சாம்பலும் கலந்த நிறம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி8.62
ஒளியியல் பண்புகள்வலிமையான திசைமாறுபடும் பண்பு
ஒளிவிலகல் எண்ஒளிபுகாது
பலதிசை வண்ணப்படிகமைபலவீனம்
புறவூதா ஒளிர்தல்இல்லை
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிரென்னரைட்டு கனிமத்தை Knn[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கிரென்னரைட்டு கனிமத்தின் நிறம் வெள்ளி-வெள்ளை முதல் பித்தளை-மஞ்சள் வரை மாறுபடும். இது 8.62 என்ற ஒப்படர்த்தி அளவும் 2.5 என்ற மோவின் கடினத்தன்மை அளவும் கொண்டுள்ளது. உயர் வெப்பநிலையிலான நீர் வெப்ப சூழல்களில் தோன்றுகிறது.

கிரென்னரைட்டு கனிமம் 1878 ஆம் ஆண்டில் உருமேனியாவின் சாகரம்ப்பு கிராமத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கேரிய கனிமவியலாளர் இயோசப் கிரென்னரால் (1839-1920) முதன் முதலில் விவரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.
  2. Krennerite Mineral Data on Webmineral
  3. Krennerite: Krennerite mineral information and data om Mindat
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரென்னரைட்டு&oldid=4141062" இலிருந்து மீள்விக்கப்பட்டது