கிரேக்கத் தேனீ
கிரேக்கத் தேனீ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கைமினாப்பிடிரா
|
குடும்பம்: | ஏபிடே
|
பேரினம்: | ஏபிசு லாட்ரெயிலே, 1802
|
இனம்: | ஏ. மெலிபெரா
|
துணையினம்: | செக்ரோபியா கீசன்வெட்டர், 1860
|
முச்சொற் பெயரீடு | |
ஏபிசு செக்ரோபியா மெலிபெரா |
கிரேக்கத் தேனீ என்பது ஏபிசு மெலிபெரா செக்ரோபியா ஆகும். இது தெற்கு கிரேக்கத்தினை பூர்வீகமாகக் கொண்ட தேனீயின் துணையினமாகும்.[1] இது இத்தாலியத் தேனீயான ஏபிசு மெல்லிபெரா லிகுசுடிகாவை மிகவும் ஒத்திருக்கிறது. இதன் நடத்தை தீவிரமில்லாமல் மென்மையாக உள்ளதாலும் திரள்வதற்கான போக்கு இல்லாததாலும் இது தேனீ வளர்ப்பிற்கு விரும்பப்படுகிறது. கிரேக்கத் தேனீயானது கிரீஸ் நாட்டில் தோன்றியது. இங்குக் காலநிலை மத்திய தரைக்கடல் பகுதி காலநிலை நிலவுகின்றது. மேலும் காலநிலை குளிர்ச்சியாக இருக்கும் ஐரோப்பாவின் வடக்கில் வாழ முடியாது. இதன் காரணமாக இவை வணிகத் தேனீ வளர்ப்பவர்களால் உலகம் முழுவதும் வளர்ப்பினை மேற்கொள்ள இயலவில்லை. இவை முக்கியமாக தெற்கு கிரேக்கத்தில் மட்டுமே வளர்க்கப்படுகின்றன.[2]
வாழ்க்கை சுழற்சி
தொகுகிரேக்கத் தேனீக்கள் பொதுவாக வசந்த காலத்தில் மிக விரைவாக வளர முனைகின்றன. இராணித் தேனீ மிகவும் சுறுசுறுப்பாகச் செழிப்பாக இருக்கும். இதன் விளைவாக வலுவான தேனீக்கள் கொண்ட கூட்டமைப்பினைக் கொண்டுள்ளது. இவை அதிக அளவில் தேனினை மத்திய தரைக்கடல் காலநிலையில் தயாரிக்கின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Crane, Eva (1999). The world history of beekeeping and honey hunting. Taylor and Francis. p. 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-92467-2.
- ↑ TY - JOUR AU - Ifantidis, Michael PY - 1979/01/01 SP - 109 EP - 115 T1 - MORPHOLOGICAL CHARACTERS OF THE GREEK BEE APIS MELLIFICA CECROPIA M.D. IFANTIDIS VL - 14 JO - Apiacta ER -
- ↑ "Types of honeybee". herstat.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.