நடுநிலக்கடல் சார் வானிலை

நடுநிலக்கடல்சார் வானிலை (Mediterranean climate) அல்லது உலர் கோடை வானிலை மழைமிகு குளிர்காலத்தையும் உலர்ந்த கோடைக்காலத்தையும் கொண்ட வானிலையாகும். நடுநிலக்கடல் வடிநிலத்தை ஒட்டி இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டாலும் பொதுவழக்கில் இது அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெரும்பான்மையான கலிபோர்னியா, மேற்கு, தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகள், தென்மேற்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு, நடு ஆசியாவின் சில பகுதிகள், மத்திய சிலி போன்ற புவியின் பிற பகுதிகளையும் குறிக்கும். இந்த வானிலை நிலவுமிடங்கள் பொதுவாக கண்டங்களின் மேற்கு கடலோரங்களில் நிலநடுக்கோட்டிற்கு கிட்டத்தட்ட 30 முதல் 45 பாகைகள் வடக்கிலும் தெற்கிலும் காணப்படுகின்றன.

நடுநிலக்கடல் சார் வானிலை நிலவும் மண்டலங்கள்
  வெப்பமிகு கோடை நடுநிலக்கடல் வானிலை (Csa)
  மிதவெப்ப-கோடை நடுநிலக்கடல் வானிலை (Csb)
காத்தலோனியாவின் கோஸ்டா பிராவா நடுநிலக்கடலோரப் பகுதி

இந்த வானிலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக இல்லாத குறும்புதர்கள் (நடுநிலக்கடல் பகுதியில் கார்ரிகு, கலிபோர்னியாவில் சப்பார்ரல், தென்னாபிரிக்காவில் பின்போசு , சிலியில் சிலியன் இசுக்ரப்) வளர்கின்றன. இங்கு விளையும் "நடுநிலக்கடல்சார் மும்மூர்த்தி" எனப்படும் பாரம்பரிய உணவுகளான கோதுமை, திராட்சை மற்றும் ஆலிவ் மிகவும் அறியப்பட்டவை.

இந்த வானிலை உள்ள புகழ்பெற்ற நகரங்களாக நடுநிலக்கடல் பகுதியில் ஏதென்ஸ், அல்ஜியர்ஸ், பார்செலோனா, பெய்ரூத், இசுமீர், எருசலேம், மர்சேய், உரோம், வாலேன்சியா, தூனிஸ் ஆகியவையும் மற்ற பகுதிகளில் அடிலெயிட், கேப் டவுன், காசாபிளாங்கா, துசான்பே, லாஸ் ஏஞ்சலஸ், லிஸ்பன், பேர்த், சான் பிரான்சிஸ்கோ, சான் டியேகோ (சிலி), தாஷ்கந்து ஆகியவையும் உள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு