மர்சேய்
மர்சேய் (பிரெஞ்சு: Marseille) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் நடுநிலக் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 855,393 (2013). மக்கள் தொகை வகையில் இது பிரான்சிலேயே இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். மேலும் இதுவே பிரான்சின் மிகப்பெரிய வர்த்தகத் துறைமுகமாகவும் உள்ளது.
மர்சேய் | |
---|---|
நாடு | பிரான்சு |
மாநகராட்சிகள் | 16 |
அரசு | |
• நகரமுதல்வர் | திரு கொதின் |
மக்கள்தொகை | 8,55,393 |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
சரித்திரம்
தொகுசுமார் 30,000 ஆண்டுகளாக இந்கு மனிதர்கள் வசிக்கிறார்கள்.
இந்நகரம் மசிலியா என்ற பெயரில் கிமு 600 அளவில் பண்டைக் கிரேக்கத்து கடலோடிகளால் அழைக்கப்பட்டது.
மதம்
தொகுமர்சேய் துறைமுக நகரமாகையால், எல்லா மனிதரையும், அவர்களின் மதங்களையும் அங்கே காணலாம்.
மதத்தினர் | மக்கள்தொகை |
---|---|
ரோமன் மத்தோலிக்கர் |
600,000 |
இஸ்லாமியர் | 150,000/200,000 |
அர்மேனிய கிறிஸ்தவர் | 80,000 |
யூதர் | 80,000 |
சீர்திருத்த கிறிஸ்தவர் | 10,000 |
கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர் | 10,000 |
பௌத்தர் | 3,000 |
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- அதிகார பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2010-11-24 at the வந்தவழி இயந்திரம்