கிரேட்டான்

கிரேட்டான் (craton) தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் மிகத் தொன்மையான அங்கமாகும். கண்ட கற்கோளத்தின் நிலையான, தொன்மையான பகுதியாகும்.

கிரேட்டான் அமைவை காட்டும் படம்

கண்டங்களின் இணைப்பு/பிரிதல் சுழற்சிகளால் பாதிக்கப்படாது இருக்கும் இந்த கிரேட்டான்கள் தட்டுப் புவிப் பாறையின் உள்ளகத்தே காணப்படுகின்றன. இவை படிகநிலை அடிமானப் பாறைகளால் ஆனவை; இவற்றின் மீது பிற்கால படிவுப் பாறைகள் மூடியிருக்கலாம். அடர்த்தியான புவி மேலாட்டைகொண்டுள்ள கிரேட்டான்களின் வேர்கள் மிக ஆழ்ந்து புவியின் மூடகத்தினுள் பல நூறு கிலோமீட்டர்கள் வரை நீண்டுள்ளன.[1]

கிரேடான்களின் கற்கோளம் பெருங்கடல்சார் கற்கோளத்தை விட தொன்மையானது – 4 பில்லியன் ஆண்டுகள் எதிர் 180 மில்லியன் ஆண்டுகள்.[2]

கிரேட்டான் என்ற சொல் நிலவியலில் நிலையற்ற, இயங்குகின்ற நிலப்பகுதிகளிலிருந்து கண்டத்தின் நிலையான பகுதிகளை அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றது.

கிரேட்டான்கள் புவியியலில் நிலவியல் மாகாணங்களாக பிரிக்கப்படுகின்றன. நிலவியல் பண்புகள் ஒத்திருக்கும் நிலப்பகுதி நிலவியல் மாகாணமாக வரையறுக்கப்படுகின்றது.

மேற்சான்றுகள் தொகு

  1. Stanley, Steven M. (1999). Earth system history. New York: W.H. Freeman. பக். 297–302. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7167-2882-6. https://archive.org/details/earthsystemhisto0000stan. 
  2. Petit, Charles (18 December 2010). "Continental hearts - Science News". Science News (Society for Science & the Public) 178 (13): 22–26. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8423. http://www.sciencenews.org/view/feature/id/66927/title/Continental_Hearts. பார்த்த நாள்: 2011-01-08.  p25
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேட்டான்&oldid=3582991" இலிருந்து மீள்விக்கப்பட்டது