கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே

கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே (Great Indian Peninsula Railway) என்பது தற்போதைய மத்திய ரயில்வேயின் முன்னோடி ஆகும். இதன் தலைமையகம் பம்பாயில் உள்ள போர்பந்தரில் (விக்டோரியா முனையம் என்றும் சத்ரபதி சிவாஜி முனையம் என்றும் அழைக்கப்படுகிறது) செயல்பட்டது. கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே ஆகஸ்ட் 1, 1849 ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தால் உருவாக்கப்பட்டது. [1]இதில் 50,000 பவுண்ட்கள் பங்கு மூலதனமாக செய்யப்பட்டது.

கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே
நிறுவுகை1849
தலைமையகம்பம்பாய், பிரித்தானிய இந்தியா
சேவை வழங்கும் பகுதிபிரித்தானிய இந்தியா
தொழில்துறைரயில்வே
சேவைகள்தொடருந்து போக்குவரத்து
கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வேயின் வரைபடம், 1870

ஆகஸ்ட் 17, 1849 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியுடன் இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் படி இந்த நிறுவனத்திற்கு ரயில் பாதை அமைக்கவும் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஜூலை 1, 1925 அரசு இந்த நிறுவனத்தை கையகப்படுத்தியது. சுதந்திரத்துக்கு பிறகு நவம்பர் 5, 1951 அன்று மத்திய ரயில்வேயுடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு