கிரைக் வெண்டர்

கிரைக் வெண்டர் (Craig Venter, பி. அக்டோபர் 14, 1946) ஒரு அமெரிக்க உயிரியல் ஆய்வாளர் மற்றும் தொழில் வல்லுநராவார். இவர் மனித மரபணுத் தொடரை முதலிற் சோதித்தவர்களில் குறிப்பிடத்தக்கவரும்[1] செயற்கை உயிர் மற்றும் மரபணு உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்கவரும் ஆவார்.[2][3] செலிரா சீனோமிக்சு (Celera genomics), தி இன்சிடிடியூட் ஒஃப் சீனோமிக் ரிசேர்ச் (The Institute of Genomic Research, TIGR) மற்றும் செ. கிரைக் வெண்டர் இன்சிடிடியூட் (J. Craig Venter Institute) என்னும் மரபணு ஆய்வியல் நிறுவனங்களை தோற்றுவித்தவருமாவார். இவர் கடைசியாகக் குறிப்பிடப்பட்ட நிறுவனத்தில் செயற்கை கல உருவாக்கத்திலும் மற்றும் கடலும் கடல் சார்ந்தப் பகுதிகளில் உயிர் மற்றும் மரபணு பரவியிருத்தலிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவர் 2007 மற்றும் 2008ல் டைம் செய்தித்தாள் (Time Magazine) வெளியிட்ட உலகின் நூறு ஆளுமைமிக்க ஆட்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டவர். இது மட்டுமல்லாது, பிரித்தானிய இதழான நியூ ச்டேச்மேன் (New Statesman) வெளியிட்ட உலகின் 50 ஆளுமை மிக்க ஆட்களில் பதினான்காம் இடத்தை பிடித்திருந்தார்.[4]. இவரின் மரபணு முழுவதும் தொடரறியப்பட்டு, 2007 ம் ஆண்டு சேம் லெவி என்னும் அறிவியலாளரால் தலைமை வகிக்கப்பட்ட குழுவால் வெளியிடப்பட்டது[5].

செ. கிரைக் வெண்டர்
கிரைக் வெண்டர் 2007இல்
பிறப்புஅக்டோபர் 14, 1946 (1946-10-14) (அகவை 78)
உப்பு ஏரி நகரம் (Salt Lake City), உத்தா, அமெரிக்கா
பணியிடங்கள்செ. கிரைக் வெண்டர் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியப் பல்கலைக்கழகம், சாண் டீகோ
அறியப்படுவதுடி.என்.ஏ
மனித மரபணு
மெட்டாமரபணு
செயற்கை மரபணு
மூலக்கூறு தொடரறி முறை
விருதுகள்Kistler Prize (2008), ENI award (2008), National Medal of Science (2008)

இளமைக்காலம்

தொகு

வெண்டர் பிறந்தது சால்ட் லேக் சிட்டி, உத்தா, அமெரிக்காவில். அவர் தொடக்கக் காலத்தில் படிப்பில் கவனம் கொள்ளாமல் நேரத்தை படகிலும் துலாவுவுதிலும் செலவழித்துக் கொண்டிருந்தார்.[6] வியட்நாம் போரின் போது அமெரிக்கக் கப்பற்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டார். இவர் ஒரு முறை கடலில் குதித்து தற்கொலை செய்துக்கொள்ள கூட முயன்றிருக்கிறார். பின்னர், மனதை மாற்றிக்கொண்டு மருத்துவம் படித்தவர் பிற்காலத்தில் உயிரியல் ஆய்வில் ஈடுபடுத்திக்கொண்டார்.[6]

கல்வி

தொகு

இவர் 1972ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் உயிர்வேதியலில் இ.அ. (இளமறிவியல்) பட்டமும், 1975 வாக்கில் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தில், உடற்செயலியல் மற்றும் மருந்தியலில் முனைவர் பட்டமும் பேற்றார். இவர் பிற்காலத்தில் நீயூ யார்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பின்பு நேசனல் இன்சிடிடியூட் ஒஃப் எல்த் (NIH - National Institute of Health) என்னும் நிறுவனத்தில் இணைந்துப் பணியாற்றிவருகிறார்.[7][8]

குறிப்பிடத்தக்கவை

தொகு
  • சாட்கன் சிக்வன்சிங் (shotgun sequencing) என்னும் மூலக்கூறு தொடரறி முறையின் முன்னோடியாவார்.[9]
  • மனித மரபணு திட்டப்பணி (HGP - Human Genome Project) முதன்மை அங்கத்தவராக பணியாற்றியவராவார்.[10].
  • உலக கடல் மாதிரிப்பயணம் (GOS-Global Ocean Sampling Expedition) என்னும் திட்டத்தில் பணியாற்றுகிறார்[11].
  • செயற்கை உயிரணு தயாரித்தலில் பணியாற்றி வருபவராவார்.[12].

மேற்கோள்கள்

தொகு
  1. Shreeve, Jamie (October 31, 2005). "The Blueprint Of Life". Retrieved December 6, 2007
  2. Fox, Stuart (May 21, 2010). "J. Craig Venter Institute creates first synthetic life form". Retrieved May 21, 2010.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-06-29. பார்க்கப்பட்ட நாள் 2011-10-08.
  4. "14. Craig Venter - 50 People Who Matter 2010 |". New Statesman. Retrieved 21 October 2010
  5. Levy S, Sutton G, Ng PC, Feuk L, Halpern AL, et al. (2007). "The Diploid Genome Sequence of an Individual Human". PLoS Biology 5 (10): e254. doi:10.1371/journal.pbio.0050254. PMC 1964779. PubMed
  6. 6.0 6.1 enter, J. Craig. (2007-11-19). Authors@Google: J. Craig Venter. United States. Event occurs at 1:40-2:25.
  7. http://people.famouswhy.com/craig_venter/
  8. http://www.nndb.com/people/832/000163343/
  9. Weber, James L.; Myers, Eugene W. (1997). "Human Whole-Genome Shotgun Sequencing". Genome Research 7 (5): 401–409. doi:10.1101/gr.7.5.401 (inactive 2010-05-20). PubMed
  10. Victor McElheny, Drawing the Map of Life: Inside the Human Genome Project, New York, Basic Books, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-465-04333-0
  11. Larkman, Kirell (September 7, 2007). "Yacht for Sale: Suited for Sailing, Surfing, and Seaborne Metagenomics". GenomeWeb.com (GenomeWeb News).
  12. Howell, Katie (July 14, 2009). "Exxon Sinks $600M Into Algae-Based Biofuels in Major Strategy Shift". NYTimes.com (New York Times)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரைக்_வெண்டர்&oldid=3549788" இலிருந்து மீள்விக்கப்பட்டது