கிறித்தவ வழிபாட்டு முறை
கிறித்தவ வழிபாட்டு முறை (Christian liturgy) என்பது கிறித்தவ சபைகள் தம் சமயச் சடங்குகளை நிகழ்த்தும்போது வழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றோ, கடைப்பிடிப்பது சிறப்பானது என்றோ நிர்ணயித்திருக்கின்ற முறை ஆகும்.
"வழிபாடு" (liturgy) என்னும் சொல் கிறித்தவத்தில் பொது வழிபாட்டைக் குறிக்கும் என்றாலும், பிசான்சிய வழிபாட்டு முறையில் அச்சொல் "நற்கருணை வழிபாட்டை" குறிக்கின்றது.[1]
கடந்த கால, மற்றும் இக்கால வழிபாட்டு முறைகளின் பட்டியல்
தொகுவெவ்வேறு கிறித்தவ சபைகளும் குழுக்களும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளைப் பயன்படுத்திவந்துள்ளன.
மேற்கு மரபைச் சார்ந்த கிறித்தவ திருச்சபைகள்
தொகுஇலத்தீன் மரபு கத்தோலிக்க திருச்சபை
தொகு- உரோமை வழிபாட்டுமுறை (Roman Rite): இது கீழ்வரும் வகைகளில் நிலவுகிறது:
- திரெந்துக்கு முற்பட்ட திருப்பலி முறை: 1570க்கு முற்பட்ட வெவ்வேறு முறைகள்
- உரோமை வழிபாட்டு முறையின் தனி வகை (Extraordinary form of the Roman Rite): இது "திரெந்து திருப்பலி முறை" (Tridentine Mass) எனவும் அழைக்கப்படுகிறது. இது 1570-1970 ஆண்டுக் கட்டத்தில் கத்தோலிக்க இலத்தீன் மரபில் பொது முறையாக இருந்தது. அதன் 1962ஆம் ஆண்டு வடிவத்தில் அதை சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடைப்பிடிக்கலாம் என்று 2007இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வழிமுறை நல்கினார்.
- உரோமை வழிபாட்டு முறையின் பொது வகை (Ordinary form of the Roman Rite). இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் (1962-1965) அளித்த வழிமுறைக்கு ஏற்ப, 1970இலிருந்து இன்றுவரை இலத்தீன் மரபு கத்தோலிக்க திருச்சபையின் உரோமை வழிபாட்டு முறையாக இந்த முறை இருந்து வருகிறது. இது சில வெளைகளில் "திருத்தந்தை ஆறாம் பவுல்" வழங்கிய முறை என்றோ, "புதிய வழிபாட்டு முறை" (Novus Ordo) என்றோ அழைக்கப்படுகிறது.
- ஆங்கிலிக்க வழக்கம் (Anglican Use): இது முன்னாள் ஆங்கிலிக்க சபையினராக இருந்து தற்போது கத்தோலிக்க சபையைச் சார்ந்தவர்களுக்கென்று உள்ளது.
- அம்புரோசிய வழிபாட்டு முறை (Ambrosian Rite): இத்தாலியின் மிலான் மறைமாட்டத்திலும் அதை அடுத்த பகுதிகளிலும் வழக்கத்தில் உள்ள முறை.
- அக்குவீலா வழிபாட்டு முறை (Aquileian Rite): வட இத்தாலியில் வழக்கத்தில் இருந்த முறை தற்போது வழக்கொழிந்து விட்டது.
- பிராகா வழிபாட்டு முறை (Rite of Braga): போர்த்துகல் நாட்டு பிராகா மறைமாவட்டத்தில் வழங்கிய இம்முறை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் வழிமுறைகளுக்குப் பின் அவ்வளவாக வழக்கத்தில் இல்லை.
- டூராம் வழிபாட்டு முறை (Durham Rite): இங்கிலாந்தின் டூராம் மறைமாவட்டத்தில் புனித பெனடிக்ட் சபைத் துறவியரின் முயற்சியால் வழக்கத்தில் வந்த முறை. தற்போது வழக்கொழிந்துவிட்டது.
- காலிய வழிபாட்டு முறை (Gallican Rite): முன்னாளைய பிரான்சில் (Gaul) வழக்கத்தில் இருந்தது. தற்போது வழக்கொழிந்துவிட்டது.
- மொசராபி வழிபாட்டு முறை (Mozarabic Rite): எசுப்பானியாவின் தொலேதோ மற்றும் சலமான்கா மறைமாவட்டங்களில் வழக்கத்தில் இருந்தது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் வழிமுறைகளுக்குப் பின் அவ்வளவாக வழக்கத்தில் இல்லை.
- கெல்டிக் வழிபாட்டு முறை (Celtic Rite): பிரித்தானிய தீவுகளில் வழக்கத்தில் இருந்தது. தற்போது வழக்கொழிந்துவிட்டது.
- சாரும் வழிபாட்டு முறை (Sarum Rite): இங்கிலாந்தில் நிலவிய இந்த வழிபாட்டு முறை தற்போது வழக்கொழிந்துவிட்டது.
- கத்தோலிக்க துறவற சபைகள் வழிபாட்டு முறைகள்: இவை பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டன.
- பெனடிக்ட் வழிபாட்டு முறை (Benedictine Rite)
- கார்மல் வழிபாட்டு முறை (Carmelite Rite)
- கார்த்தூசிய வழிபாட்டு முறை Carthusian Rite)
- சிஸ்டேர்சிய வழிபாட்டு முறை (Cistercian Rite)
- தோமினிக் வழிபாட்டு முறை (Dominican Rite)
- பிரான்சிசு வழிபாட்டு முறை (Franciscan Rite)
- பிரான்சிசு கப்புச்சின் வழிபாட்டு முறை (Friars Minor Capuchin Rite)
- பிரிமோன்ஸ்தென்சிய வழிபாட்டு முறை (Premonstratensian Rite)
- மரியாவின் ஊழியர் சபை வழிபாட்டு முறை (Servite Rite)
புரட்டஸ்தாந்து திருச்சபைகளின் வழிபாட்டு முறைகள்
தொகுசில புரட்டஸ்தாந்து சபைகள் நிர்ணயிக்கப்பட்ட வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் பிற புரட்டஸ்தாந்து சபைகள் வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ளன.
சீர்திருத்தம் பெற்ற சபைகள்
தொகுலூத்தரன் திருச்சபைகள்
தொகுஆங்கிலிக்க சபைக் குழுக்கள்
தொகுஐக்கிய மெதடிஸ்து திருச்சபை
தொகுகீழைக் கிறித்தவ திருச்சபைகள்
தொகுகீழை மரபுவழி சபைகள்
தொகுகிழக்கு மரபுவழி திருச்சபைகள்
தொகுகிழக்கு அசீரிய சபை
தொகுகீழை கத்தோலிக்க சபைகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ Mother Mary and Ware, Kallistos Timothy, Festal Menaion (3rd printing, 1998), St. Tikhon's Seminary Press, p. 555, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-878997-00-9
மேல் ஆய்வுக்கு
தொகு- Reed, Luther D. (1947) The Lutheran Liturgy: a Study [especially] of the Common Service of the Lutheran Church in America. Philadelphia, Penn.: Muhlenberg Press. N.B.: This study also includes some coverage of other Lutheran liturgical services, especially of Matins and Vespers
வெளி இணைப்புகள்
தொகு- Liturgy Archive
- Liturgy (Catholic Encyclopedia)
- Liturgy website Contemporary liturgy - theory, history, practice
- Orthodox Tradition and the Liturgy பரணிடப்பட்டது 2011-01-19 at the வந்தவழி இயந்திரம்