கிறித்தியன் சாமுவேல் வெயிசு

கிறித்தியன் சாமுவேல் வெயிசு (Christian Samuel Weiss, கிறிஸ்டியன் சாமுவேல் வெயிஸ், 26 பெப்ரவரி 1780 – 1 அக்டோபர் 1856) செருமானியப் படிகவியலாளரும், கனிமவியலாளரும் ஆவார்.

கிறித்தியன் வெயிசு

லைப்சிக்கில் பிறந்த இவர், பட்டப் படிப்பை முடித்த பின்னர் 1803 முதல் 1808 இயற்பியலாளராகப் பணியாற்றினார். அதே வேளையில், சுவிட்சர்லாந்து, பிரான்சு ஆகிய நாடுகளில் 1806–08 வரை நிலவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.[1] 1810 இல் பெர்லின் பல்கலைக்க்ழகத்தில் கனிமவியலில் பேராசிரியராக சேர்ந்தார். 1818/19, 1832/33 காலப்பகுதியில் பல்கலைக்கழக உபவேந்தராகவும் பணியாற்றினார்.[1]

நவீன படிகவியலில் அளபுருவாக்கத்தில் இவரது பங்களிப்பு பெரிதும் அறியப்படுகிறது. அத்துடன் கணித அறிவியலில் இதனை ஒரு துணைப் பிரிவாக ஆக்குவதிலும் வெற்றி கண்டார். படிகவியலில் இவரது அடிப்படைக் கொள்கை "வெயிசு வலய விதி" என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு