கிறிஸ்டோபர் நெல்சன் (காவல்துறை அலுவலர்)
கிறிஸ்டோபர் நெல்சன் (Christopher Nelson) ஓய்வு பெற்ற ஓர் இந்தியக் காவல் பணி அலுவலர் ஆவார். இவர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவிலில் இருந்து வந்தவர் ஆவார்.
இவர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.2011 இல் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு, தமிழ்நாடு திட்டக் குழுவின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் காவல்துறையில் காவல்துறைத் தலைவர் பதவியை வகித்தார்.[1]
2001 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதியின் சர்ச்சைக்குரிய கைது நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
சாதனைகள்
தொகு1995 ஆம் ஆண்டில் அவருக்கு குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டது. செப்டம்பர் 2012 இல் இவர் தமிழக அரசால் தமிழக தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fitness test begins for constable recruitment". தி இந்து. 11 December 2009 இம் மூலத்தில் இருந்து 16 December 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091216124802/http://www.hindu.com/2009/12/11/stories/2009121150620300.htm. பார்த்த நாள்: 27 April 2013.
- ↑ "New Information Commissioners for TN". The New Indian Express. 2 September 2012 இம் மூலத்தில் இருந்து 8 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808224102/http://www.newindianexpress.com/cities/chennai/article599326.ece. பார்த்த நாள்: 27 April 2013.