கிறிஸ்தவ அறுதிவிளைவியல்
கிறிஸ்தவ அறுதிவிளைவியல் (Christian eschatology) என்பது கிறிஸ்தவ இறையியலில் ஆய்வில் "கடைசி விஷயங்கள்" எனப்படுபவைகளைக் குறித்த ஒரு முக்கியமான கிளையாகும். "கடைசி" (ἔσχατος) மற்றும் "ஆய்வு" (-λογία) ஆகிய பொருள் கொண்ட இரு கிரேக்கச் சொற்களிலில் இருந்து கிடைக்கும் அறுதிவிளைவியல் (eschatology) ‘முடிவு விஷயங்கள்’ என்பவைகளைப் பற்றிய ஆய்வாகும். இது தனிநபருடைய வாழ்க்கையின் முடிவு, யுகத்தின் முடிவு, உலகத்தின் முடிவு, மற்றும் தேவனுடைய ராஜ்யத்தின் தன்மை ஆகியவற்றைக் குறித்ததாக இருக்கலாம். பொதுவாகக் கூறவேண்டுமெனில், கிறிஸ்தவ அறுதிவிளைவியல் என்பது விவிலியத்தின் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகியவற்றின் நூல்களின் அடிப்படையில் தனிநபரின் ஆன்மா, உண்டாக்கப்பட்டிருக்கும் மொத்த படைப்பு என்பவைகளின் அறுதி ஊழ்வினையைப் பற்றியது.
கிறிஸ்தவ அறுதிவிளைவியல் என்பது இறப்பும் இறப்பிற்குப் பின்னான வாழ்வும், விண்ணகமும் நரகமும், இயேசுவின் இரண்டாம் வருகை, மரித்தோரின் உயிர்த்தெழுதல், எடுத்தகொள்ளப்படுதல், உபத்திரவம், ஆயிரமாண்டு ஆளுகை, உலக முடிவு, கடைசி நியாத்தீர்ப்பு, புதிய வானம், உலகில் வரவிருக்கும் புதிய பூமி ஆகியவற்றை ஆய்வு செய்து கலந்தாய விளைகிறது. அறுதிவிளைவியல் குறித்த பகுதிகள் விவிலியத்தின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இரண்டிலும் பல இடங்களில் காணப்படுகிறது. விவிலியத்திற்கு வெளியேயும், திருச்சபை மரபுகளிலும் கூட பல அறுதிவிளைவியல் முன்னறிவிப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள் கிடைக்கின்றன.