கிறிஸ்லாம் (நைஜீரியா)
கிறிஸ்லாம் (Chrislam) நைஜீரியா நாட்டின் தென்மேற்கில் வாழும் யோருபா மக்கள் கடைபிடிக்கும் ஆபிரகாமிய சமயமாகும். கிறிஸ்லாம் சமயமானது கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகியவற்றின் நற்கூறுகளை இணைத்து புதிய சமயமாக 1970-ஆம் ஆண்டு முதல் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரத்தில் துவக்கப்பட்டது. இந்த புதிய சமயத்தை பெரும்பாலான யோருபா மக்கள் கடைபிடிக்கின்றனர்.[1]இசுலாம் மற்றும் கிறித்தவம் ஒன்றிற்கு ஒன்று எதிராக இரண்டு தனித்தனி மற்றும் பிரத்தியேக மதங்களாக செயல்படுவதால், இரு மதங்களுக்கிடையில் உள்ள பொதுவான தன்மைகளைத் தேடி, இரண்டு சமயங்களையும் உள்ளடக்கிய பொதுவான ஒன்றியத்தை கிறிஸ்லாம் சமயம் ஊக்குவிக்கிறது. [1] நைஜீரியா நாட்டின் வடக்கில் இசுலாமியர்களும், தெற்கில் கிறித்தவர்களும் பெரும்பான்மையினத்தவராக இருப்பினும், கிறிஸ்லாம் சமயத்தைப் பின்பற்றும் யோருபா மக்கள் நைஜீரியாவின் தென்மேற்கில் யோருபாலாந்து பகுதியில் அதிகம் வாழ்கின்றனர்.
கிறிஸ்லாம் இயக்கத்தின் அடிப்படை மெய்யியல்
தொகு- இயேசுவின் கடவுள் ஒருவரே
- முகம்மது நபியின் கடவுள் ஒருவரே
- மனிதநேயம் ஒன்றே
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Janson, Marloes (November 2016). "Unity Through Diversity: A Case Study of Chrislam in Lagos". Africa: Journal of the International African Institute 86 (4): 646–672. doi:10.1017/S0001972016000607. https://eprints.soas.ac.uk/22667/1/Janson_22667.pdf.