கிலாலைட்டு

வகைப்படுத்தப்படாத சிலிக்கேட்டு

கிலாலைட்டு (Gilalite) என்பது Cu5Si6O17•7(H2O).[3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு தாமிர சிலிக்கேட்டு கனிமம் ஆகும். கால்சி-சிலிக்கேட்டுப் பாறை மற்றும் சல்பைடு சுண்ணாம்புப் சிலிக்கேட்டுப் பாறைகளின் பிற்போக்கான உருமாறும் கட்டத்தில் கிலாலைட்டு தோன்றுகிறது [2].

கிலாலைட்டு
Gilalite
நீலநிற கிலாலைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCu5Si6O17•7(H2O)
இனங்காணல்
மோலார் நிறை884.3 கி/மோல்
நிறம்நீலப் பச்சை, பச்சை
படிக இயல்புஆர இழை கோள வடிவம்
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு
அறியப்படாத இடக்குழு
விகுவுத் தன்மைமெழுகு அல்லது பசை
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுஅலோகத்தன்மை
கீற்றுவண்ணம்இளம் பச்சை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி2.72
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα= 1.560 nβ=1.635 nΎ= 1.635
இரட்டை ஒளிவிலகல்δ = 0.075
மேற்கோள்கள்[1][2][3]
பிரேசில் நாட்டின் சியாரா மாநில யுவாசெய்ரோ டூ நோர்ட்டி நகர குவார்ட்சு படிகங்களில் உள்ளடங்கிய கிலாலைட்டு கனிமம். (அளவு: 7.1 x 4.7 x 2.7 cm)

டையாப்சைடு படிகங்களுடன் தொடர்புடைய விரிசல் நிரப்பிகளாகவும் கனமான மேற்பூச்சுகளாகவும் கூடத் தோன்றுகிறது. மேலும் இக்கனிமம் பொதுவாக சிறிசிறு ஆர இழை கோள வடிவத்தில் காணப்படுகிறது. அமெரிக்காவின் அரிசோனாவிலுள்ள கிலா மாகாணத்தின் போர்பைரி தாமிரச் சுரங்கத்தில் 1980 ஆம் ஆண்டு முதன்முதலாக அப்பாகைட்டு கனிமத்துடன் சேர்ந்த நிலையில் கிலாலைட்டு கண்டறியப்பட்டது [4]. கண்டறியப்பட்ட இடத்தின் பெயரே கனிமத்திற்கும் சூட்டப்பட்டது. நெவேதா மாநிலத்தின் கிளார்க் மாகாணம், பிரேசில் நாட்டின் சியாரா மாநில யுவாசெய்ரோ டூ நோர்ட்டி என்ற நகரத்திலும், கிரீசு நாட்டின் அட்டிகா பிரதேசத்திலுள்ள லேவ்ரியான் மாவட்டத்தில் உலோகக் கசடுகளிலும் கிலாலைட்டு காணப்படுவதாக அறியப்படுகிறது [3].

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிலாலைட்டு கனிமத்தை Gil[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. gilalite - Wolfram Alpha
  2. 2.0 2.1 Handbook of Mineralogy
  3. 3.0 3.1 3.2 Gilalite: Gilalite mineral information, Mindat.org
  4. F.P. Cesbron and S.A. Williams; March 1980;"Apachite and gilalite, two new copper silicates from Christmas, Arizona" Mineralogical Magazine, Vol. 43, pp. 639-41
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலாலைட்டு&oldid=3938016" இலிருந்து மீள்விக்கப்பட்டது