கிலி லியாங் தீவு

இந்தோனேசியத் தீவு

கிலி லியாங் (Gili Iyang) இந்தோனேசியாவின் பாலி கடலில் உள்ள ஒரு தீவாகும். இந்த தீவை இந்தோனேசியாவின் கிழக்கு யாவா மாகாணத்தின் சுமெனெப் மாநகராட்சி நிர்வகிக்கிறது.

கிலி லியாங் தீவு பாலி கடலில் அமைந்துள்ளது. தீவு ஒப்பீட்டளவில் வளர்ச்சியடையாதது, இதன் தாவர பன்முகத்தன்மை மற்றும் மிகை ஆக்சிசன் அடர்த்தி[1] போன்ற காரணங்களால் அதிக கவனத்தை ஈர்க்கிறது. பல கிராமங்கள் இத்தீவில் அமைந்துள்ளன. மேலும் உள்ளூர் மக்கள் உணவு மற்றும் மருத்துவத்திற்காக உள்ளூர் தாவரங்களை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளனர் என்று 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவார்ந்த கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது. மேலும் இத்தீவு பாரம்பரியமாகவே நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட தீவாக இருந்து வருகிறது. உள்கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டும் கிணறுகள் தோண்டப்பட்டும் வருகின்றன.[2]

தீவில் வழக்கத்திற்கு மாறாக காணப்படும் அதிக ஆக்சிசன் செறிவு கில்லி லியாங்கை ஒரு சுற்றுலா மையமாகக் கருத வழிவகுக்கிறது.[1][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Susiarti, S., and V. B. L. Sihotang. "The Role of Plant Diversity In Local Community Of Gili Iyang Island, Sumenep, East Java, Indonesia." In IOP Conference Series: Earth and Environmental Science, vol. 298, no. 1, p. 012028. IOP Publishing, 2019.
  2. "Dorong Kesejahteraan Masyarakat Kepulauan, Aliyadi Salurkan Bantuan Sumur Bor » JNN.co.id". JNN.co.id (in இந்தோனேஷியன்). 2020-09-23. Archived from the original on 2020-10-29. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
  3. Okezone (2020-10-01). "Gili Iyang, Pulau Berkadar Oksigen Tertinggi Kedua di Dunia : Okezone Travel" (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலி_லியாங்_தீவு&oldid=3910616" இலிருந்து மீள்விக்கப்பட்டது