கில்லியன் நேப்

கில்லியன் நேப் (Gillian Knapp) ஓர் அமெரிக்க வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தில் வானியல், வானியற்பியல் புலங்களில் பேராசிரியராக உள்ளார். இவர் விட்மன் கல்லூரி புல உறுப்பினரும் ஆய்வாளரும் ஆவார்.[1] இவர் சுலோவான் இலக்கவியல் வானளக்கையிலும் பங்கேற்கிறார்[2] இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் செயல்முனைவான உறுப்பினராக உள்ளார்.[3]

கில்லியன் ஆர். நேப்
Gillian R. Knapp
பிறப்புஐக்கிய இராச்சியம்
துறைவானியல்
பணியிடங்கள்
  • பிரின்சுட்டன் பல்கலைக்கழகம்
  • கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்
  • மேரிலாந்து பல்கலைக்கழகம்
  • எடின்பர்கு பல்கலைக்கழகம்

கல்வி

தொகு

இவர் எடின்பர்கு பல்கலைக்கழகத்தில் படித்து இயற்பியலில்1966 இல் இளவல்பட்டம் பெற்றார்.[4] தன் வானியல் ஆர்வத்தை நிறைவேற்ற, இவர் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். இங்கு மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பூங்கா கல்லூரியில் சேர்ந்து 1971 இல் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[4] சில காலம் மேரிலாந்தில் கல்வி கற்பித்த பின்னர் இவர் 1974 இல் அமெரிக்க மேற்கு கடற்கரைக்குச் சென்றார். அங்கு இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி உறுப்பினராக தன் அறிவியல் பணியைத் தொடர்ந்துள்ளார்.[4]

அறிவியல் பணி

தொகு

இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராக 1976 இல் உயர்வு பெற்றார். இவர் அதே ஆண்டில் ஓவென்சு கணவாய்க் கதிரலை நோக்கீட்டகத்தில் புல உறுப்பினர் ஆனார்.[4]

இவர் 1980 இல் பிரின்சுட்டனுக்குச் சென்றார். அங்கே பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தில் வாவியற்பியல்துறையில் ஆராய்ச்சியாளராகத் தொடர்ந்தார். அங்கே 1984 இல் இணைப்பேராசிரியர் ஆனார்.[5] இவர் 1990 இல் இருந்து சுலோவான் இலக்கவியல் வானளக்கை நோக்கீட்டகத்தைக் கட்டியமைத்தார் இவர் பழுப்புக் குறுமீன்களையும் வெண் குறுமீன்களையும் உயர்வேக விண்மீன்களையும் கண்டுபிடித்து அவற்றின் பான்மைகளையும் வரையறுத்துக் கூறினார்.[6] இவரது அறிவியல் வாழ்க்கை பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தில் வெற்றியோடு திகழ்ந்திட, இவர் 2014 இல் செந்தகைமைப் பேராசிரியர் ஆனார்.[7]

கில்லியன் நேப் பரவலாகச் சான்று காட்டப்பட்ட வானியலாளர் ஆவார்.[8] இவர் அமெரிக்க வானியல் கழக உறுப்பினர் ஆவார். இவர் அரசு வானியல் கழக உறுப்பினரும் பன்னாட்டு வானியல் ஒன்றிய உறுப்பினரும் பன்னாட்டு வானொலி அறிவியல் ஒன்றிய உறுப்பினரும் ஆவார்.[7]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் வானியலாளரான ஜேம்சு குண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Princeton". www.princeton.edu. பார்க்கப்பட்ட நாள் 27 October 2014.
  2. Solontoi, Michael; Ivezić, Željko; Jurić, Mario; Becker, Andrew C.; Jones, Lynne; West, Andrew A.; Kent, Steve; Lupton, Robert H. et al. (2012). "Ensemble properties of comets in the Sloan Digital Sky Survey". Icarus 218 (1): 571–584. doi:10.1016/j.icarus.2011.10.008. Bibcode: 2012Icar..218..571S. http://65.54.113.26/Publication/60708253/ensemble-properties-of-comets-in-the-sloan-digital-sky-survey. பார்த்த நாள்: 2014-10-27. 
  3. "International Astronomical Union". www.iau.org. பார்க்கப்பட்ட நாள் 27 October 2014.
  4. 4.0 4.1 4.2 4.3 Hutchings, Jr (1978). "Engineering and Science, Volume 42:2, November-December 1978". Engineering and Science. பார்க்கப்பட்ட நாள் 2020-03-19.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. Eckstein, Nathan (2013-11-21). "Through the Glass Ceiling, Seeing Stars". Nassau Weekly (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
  6. "Gillian R. Knapp | Dean of the Faculty". dof.princeton.edu. Archived from the original on 2020-03-18. பார்க்கப்பட்ட நாள் 2020-04-08.
  7. 7.0 7.1 "Eight faculty members transfer to emeritus status". Princeton University (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
  8. "Gillian Knapp - Google Scholar Citations". scholar.google.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்லியன்_நேப்&oldid=3952021" இலிருந்து மீள்விக்கப்பட்டது