கிளாட் ஆல்வாரஸ்

கிளாட் ஆல்வாரஸ் (Claude Alwares) என்பவர் கோவாவைச் சேர்ந்த ஒரு இயற்கை வேளாண் அறிஞர் ஆவார். சுற்றுச் சூழல் போராளி எனவும் மதிக்கப்படுகிறார் தொடக்கக் காலத்தில் கல்வியாளராக இருந்தவர். இயற்கை விவசாயம் பற்றிச் சில நூல்களை எழுதியுள்ளார்[1].[2][3]

கிளாட் ஆல்வாரஸ்

பணிகள்

தொகு

கிளாட் ஆல்வாரஸ் சுற்றுச் சூழல் கண்காணிப்புக் குழுவான கோவா அறக் கட்டளையின் இயக்குநராக உள்ளார். நெதர்லாந்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார்[4]. இந்தியாவில் இயற்கை வேளாண்மை நிறுவனம் என்னும் அமைப்பைத் தொடங்கி அந்த அமைப்பின் நிருவனச் செயலாளராக இருந்தார். தற்பொழுது அதன் மத்திய செயலக இயக்குநராக வினையாற்றி வருகிறார். கிளாட் ஆல்வாரசின் மனைவியும் சூழலியல் ஆர்வலராகவும் செயல்படுபவராகவும் உள்ளவர். இந்தத் தம்பதிகள் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

பரப்பும் கருத்துகள்

தொகு

கார்ப்போரேட்டுகளின் நலன்களுக்காக விவசாய நிலங்களைக் கையகப் படுத்தும் முயற்சி நல்லதில்லை என்பது இவருடைய கருத்து. மரபணு மாற்றுப் பயிர்களை அறிமுகப்படுத்துதலும் அவற்றை ஊக்கப் படுத்துதலும் தவறு என்று கூறி வருகிறார். வேதி விவசாயத்தால் கிடைப்பதைவிட இயற்கை விவசாயம் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள் கூடுதலாக இருக்குமே ஒழிய குறையாது என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்.

நூல்களும் கட்டுரையும்

தொகு
  • Organic Farming Sourcebook
  • Fish Curry and Rice A Source Book on Goa, Its Ecology and Life-style (2002)
  • The Great Gene Robbery (Article)

மேற்கோள்

தொகு
  1. "Livemint". Livemint. 9 August 2014. பார்க்கப்பட்ட நாள் February 1, 2015.
  2. "About Us". Other India Book Store. 2015. Archived from the original on ஜனவரி 23, 2015. பார்க்கப்பட்ட நாள் February 1, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Goa Foundation". Goa Foundation. 2015. பார்க்கப்பட்ட நாள் February 1, 2015.
  4. "Green Goa Works". Green Goa Works. 2015. Archived from the original on ஜனவரி 19, 2015. பார்க்கப்பட்ட நாள் February 1, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாட்_ஆல்வாரஸ்&oldid=3725846" இலிருந்து மீள்விக்கப்பட்டது