கிளாபாசியோ டையசு

இந்திய அரசியல்வாதி

கிளாபாசியோ டையசு (Clafasio Dias) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கோவா சட்டமன்றத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். குன்கோலிம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] கிளாபாசியா டையசு பாரதிய சனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த சட்ட மன்ற உறுப்பினர் சுபாசு ராசன் நாயக்கு மற்றும் முன்னாள் சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினர் இயோகிம் அலெமாவோ ஆகியோரை தோற்கடித்து வெற்றி பெற்றார். மாவட்ட ஊராட்சிமன்ற பஞ்சாயத்து உறுப்பினராகவும், கிராமசபை தலைவராகவும் , தெற்கு கோவா மாவட்ட ஊராட்சியின் பஞ்சாயத்து தலைவராகவும் கிளாபாசியா டையசு இருந்தார்.

கிளாபாசியோ டையசு
Clafasio Dias
கோவாவின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2017–2022
முன்னையவர்சுபாசு ராசன் நாயக்
பின்னவர்யூரி அலேமாவு
தொகுதிகான்கோலிம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி (2019–2022)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
(2017–2019)

2019 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பாரதிய சனதா கட்சியில் இணைந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பத்து உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "List of Successful Candidates" (Xlsx). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 April 2017.
  2. "10 Congress Legislators From Goa Formally Join BJP, Other Allies Jittery". NDTV.com. 12 July 2019. https://www.ndtv.com/india-news/10-congress-legislators-from-goa-formally-join-bjp-other-allies-jittery-2068202. 
  3. "In fresh jolt to Congress in Goa, 10 party legislators switch to BJP". mint. 10 July 2019. https://www.livemint.com/politics/news/congress-splits-in-40-member-goa-assembly-10-of-15-mlas-may-join-bjp-1562771258050.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாபாசியோ_டையசு&oldid=3815423" இலிருந்து மீள்விக்கப்பட்டது