கிளிஃபோர்டு மிரான்டா

கிளிஃபோர்டு மிரான்டா (Clifford Miranda) என்பவர் இந்திய கால்பந்து வீரர் ஆவார். நடுக்கள வீரரான இவர் ஐ-கூட்டிணைவில் டெம்போ கால்பந்துக் கழகத்துக்காக ஆடிவருகிறார். பாப் ஃகூட்டன் இந்திய தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணியில் நிலையான இடம் பெற்றார். 2007-ஆம் ஆண்டு நேரு கோப்பை மற்றும் 2008-இல் ஏஎஃப்சி சேலன்ஞ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணி வென்றபோது அணியில் முக்கிய அங்கம் வகித்தார். இடதுகால் ஆட்டக்காரரான இவர் டெம்போ அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கிளிஃபோர்டு மிரான்டா
சுய தகவல்கள்
முழுப் பெயர்கிளிஃபோர்டு மிரான்டா
உயரம்1.72 m (5 அடி 7+12 அங்)
ஆடும் நிலை(கள்)Midfielder
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
Dempo
எண்15
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2004-Dempo20(8)
பன்னாட்டு வாழ்வழி
2005–இந்தியா30(8)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிஃபோர்டு_மிரான்டா&oldid=3748102" இலிருந்து மீள்விக்கப்பட்டது