கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் இலங்கையின் வட மாகாணத்திலே உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகரில் யாழ்ப்பாணம் கண்டியை இணைக்கும் 1-9 (A-9) நெடுஞ்சாலையில் அமைந்த்துள்ளது.
மேற்கு திசை நோக்கியுள்ள இவ்வாலயத்தில் மூலத்தானத்தில் வேல் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கிறது. பரிவார தெய்வங்களாக விநாயகர், நடராசர், தட்சணாமூர்த்தி, சமயகுரவர், வைரவர், நவக்கிரகமூர்த்திகள் போன்ற தெய்வங்கள் உள்ளனர். இவ்வாலய மகோற்சவம் ஆண்டு தோறும் ஆவணி மாதம் இடம்பெறும் அதேவேளை கந்த சஷ்டி இவ்வாலயத்தில் இடம்பெறும். இப்பிரதேச மக்களில் பலர் இவ்வாலயத்திலேயே விரதத்தினை அனுட்டிப்பர். கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளன்று இடம்பெறும் சூரன் போர் விழாவும் இடம்பெறுவதுடன் மறுநாள் பாரணை தினத்தன்று இரவு திருக்கலியாண உற்சவமும் இடம்பெறும்.
வெளி இணைப்புகள்
தொகு- அருச்சுனா தளத்தில் உள்ள 2005ம் ஆண்டு இடம்பெற்ற கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் தேர்திருவிழா புகைப்படங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
- இரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் இணையத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ள கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆலயங்களின் பட்டியல் பரணிடப்பட்டது 2010-08-04 at the வந்தவழி இயந்திரம்