கிளிப்டன் மீன் காட்சியகம்

பாக்கித்தான் நாட்டின் கராச்சியில் உள்ள மீன் காட்ட்சியகம்

கிளிப்டன் மீன் காட்சியகம் (Clifton Fish Aquarium) பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரிலிலுள்ள கிளிப்டன் பகுதியில் அமைந்திருந்த ஒரு நீர்வாழ் உயிரினக் காட்சியகமாகும். அப்துல்லா சா காசி புனித கோவிலுக்கு அருகில் இம்மீன்காட்சியகம் இருந்தது. 1965 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை காட்சியகம் செயல்பாட்டில் இருந்தது. இது கராச்சியின் மிகப்பெரிய பொது மீன்காட்சியகமாகும். [2]

கிளிப்டன் மீன் காட்சியகம்
Map
24°48′44″N 67°01′38″E / 24.812164°N 67.027172°E / 24.812164; 67.027172
திறக்கப்பட்ட தேதி1965[1]
மூடப்பட்ட தேதி1998[1]
அமைவிடம்கிளிப்டன், கராச்சி, பாக்கித்தான்
ஆண்டு பார்வையாளர்கள்1 மில்லியன்

மூடப்பட்ட கிளிப்டன் மீன் காட்சியகத்தை மீண்டும் திறக்க பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தன. இதில் 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் ஒன்றாகும். [2]

வரலாறு தொகு

இப்போது செயல்படாத கராச்சி பெருநகரக் கழகம் சப்பானிய நிபுணர்களுடன் இணைந்து 1965 ஆம் ஆண்டு கிளிப்டனில் மீன்காட்சியகத்தைக் கட்டியது. இந்த நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தில் 33 கடல்நீர் கண்காட்சி தொட்டிகள் இருந்தன. இங்கு கடல் சார்ந்த மீன்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் 14 நன்னீர் தொட்டிகளில் நன்னீரில் வாழும் மீன் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. நகரத்தில் உள்ள ஒரே மீன் நீர்வாழ் உயிரினக் காட்சியகமாக இது இருந்தது, ஆண்டுக்கு ஒரு மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது. கராச்சி நகராட்சிக்கு மிகப்பெரிய வருவாய் ஈட்டித்தந்த காட்சியகமாகவும் விளங்கியது.[1]

கிளிப்டன் நீர்வாழ் உயிரினக் காட்சியகம் பாழடைந்த நிலை காரணமாக 1998 ஆம் ஆண்டு மூடப்பட்டது.[3] 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது[4] 2007-2008,[1] 2008-2009,[5] 2009-2010 [6] நிதி நிலை அறிக்கைகளில் இதற்காக கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை நீர்வாழ் உயிரினக் காட்சியகம் மூடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Shortage of funds keeps aquarium closed". dawn.com. Daily Dawn. 12 September 2008. பார்க்கப்பட்ட நாள் 5 June 2010.
  2. 2.0 2.1 "Karachi's largest public aquarium about to get a Rs100 million facelift". Express Tribune. 8 July 2012. http://tribune.com.pk/story/405112/karachis-largest-public-aquarium-about-to-get-a-rs100-million-facelift/. பார்த்த நாள்: 9 July 2012. 
  3. "Clifton aquarium to be revived next year". dawn.com. Daily Dawn. 6 November 2004. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
  4. "Clifton aquarium to be reopened by October". accessmylibrary.com. Pakistan Press International. 2 September 2005. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
  5. "Sitting on 2nd February 2010". pas.gov.pk. Provincial Assembly of Sindh. பார்க்கப்பட்ட நாள் 5 June 2010.
  6. "CDGK unveils Rs52bn Karachi budget for FY 2009-10". onepakistan.com. OnePakistan. 27 June 2009. Archived from the original on 9 October 2011. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.