கிளீசுத்தனீசு
கிளிஸ்தனீஸ் (Cleisthenes, /ˈklaɪsθɪniːz/ KLYSE-thin-eez; கிரேக்கம்: Κλεισθένης Kleisthénēs அல்லது Clisthenes (இலத்தீன்: Clīsthenēs ) என்பவர் பண்டைய ஏதென்சின் அரசியலமைப்பை சீர்திருத்தி, கிமு 508 இல் சனநாயக அடிப்படையில் அமைத்த பெருமைக்குரிய ஒரு பண்டைய ஏதெனியன் சட்டமியற்றிய ஆட்சியாளர் ஆவார். [1] இந்த சாதனைகளுக்காக, வரலாற்றாசிரியர்கள் இவரை "ஏதெனியன் சனநாயகத்தின் தந்தை" என்று குறிப்பிடுகின்றனர். [2] இவர் பிரபுத்துவ அல்க்மேயோனிட் குலத்தைச் சேர்ந்தவர். இவர் மெகாகிள்ஸ் மற்றும் அகாரிஸ்ட்டின் இளைய மகன் ஆவார். இவர் ஏதெனியன் குடிமக்கள் அவையின் அதிகாரத்தை அதிகரித்ததற்காகவும், ஏதெனியன் அரசியலில் பிரபுக்களின் அதிகாரத்தைக் குறைத்ததற்காகவும் புகழ் பெற்றார். [3]
கிளீசுத்தனீசு | |
---|---|
கொலம்பஸ் (ஒகையோ), ஓகையோ அரசு இல்லத்தில் "ஏதெனியன் சனநாயகத்தின் தந்தை" என்று அழைக்கப்படும் கிளீஸ்தீனஸின் நவீன மார்பளவு சிலை | |
பிறப்பு | கி.மு. 570 |
கிமு 510 இல், எசுபார்டன் படைகள் ஏதெனியர்களுக்கு பிசிசுட்ரேசின் மகனான கொடுங்கோலன் இப்பியாசை அகற்ற உதவியது. எசுபார்த்தாவின் மன்னரான முதலாம் கிளிமினெசால், இசகோரஸ் தலைமையிலான எசுபார்டன் சார்பு சிலவர் ஆட்சியை ஏற்படுத்தினார். [4] ஆனால் அவர்களது போட்டியாளரான கிளீஸ்தீனஸ், நடுத்தர வர்க்கத்தின் ஆதரவுடனும், சனநாயகவாதிகளின் உதவியுடனும் ஆட்சியைப் பிடித்தார். கி.மு. 508 மற்றும் 506 ஆம் ஆண்டுகளில் இவ்விசயத்தில் கிளீமினெஸ் தலையிட்டார். ஆனால் அப்போது ஏதெனியர்களின் ஆதரவைப் பெற்ற கிளீஸ்தீனசைத் தடுக்க முடியவில்லை. கிளிஸ்தனீஸ் சீர்திருத்தங்கள் மூலம், ஏதென்சின் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் (சுதந்திர குடிமக்களுக்கு மட்டும்) வழங்கப்பட்டன.[5] மேலும் ஆஸ்ட்ராசிசம் என்னும் நாடுகடத்தல் ஒரு தண்டனையாக நிறுவப்பட்டது. [6]
குறிப்புகள்
தொகு- ↑ Ober, pp. 83 ff.
- ↑ R. Po-chia Hsia, Julius Caesar, Thomas R. Martin, Barbara H. Rosenwein, and Bonnie G. Smith, The Making of the West, Peoples and Cultures, A Concise History, Volume I: To 1740 (Boston and New York: Bedford/St. Martin's, 2007), 44.
- ↑ Langer, William L. (1968) The Early Period, to c. 500 B.C. An Encyclopedia of World History (Fourth Edition pp. 66). Printed in the United States of America: Houghton Mifflin Company. Accessed: January 30, 2011
- ↑ Lewis, D. M. (1963). "Cleisthenes and Attica". Historia: Zeitschrift für Alte Geschichte 12 (1): 25. பன்னாட்டுத் தர தொடர் எண்:0018-2311. https://www.jstor.org/stable/4434773.
- ↑ Hayek, Friedrich A. von (1960). The constitution of liberty. pp. 238–242.
- ↑ Robinson, C. A. (1952). "Cleisthenes and Ostracism". American Journal of Archaeology 56 (1): 23–24. doi:10.2307/500834. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9114. https://www.jstor.org/stable/500834.