கிளைக்கால் பிளவு

கிளைக்கால் பிளவு (Glycol cleavage) என்பது கரிம வேதியியல் ஆக்சிசனேற்ற சிறப்பு வகை வினையாகும். விசினல் டையாலில் உள்ள (கிளைக்கால்) கார்பன்–கார்பன் பிணைப்பு பிளவுபட்டு இரண்டு கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்புகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. டையாலில் நிலவும் பதிலீட்டு நிலையின் அடிப்படையில் கீட்டோன் அல்லது ஆல்டிகைடு உருவாகிறது.

சர்க்கரைகளின் அமைப்பினை உறுதி செய்வதற்குப் பயன்படுவதால், கிளைக்கால் பிளவு வினை ஆய்வகத்தில் ஒரு முக்கியமான வினையாகக் கருதப்படுகிறது. பிளவு வினை நிகழ்ந்த பின்னர் உருவான கீட்டோன் மற்றும் ஆல்டிகைடு துண்டுகளை ஆய்வு செய்ய முடியும். கிளைக்காலில் முன்னர் இருந்த ஐதராக்சில் தொகுதியின் அமைவிடத்தை நிர்ணயிக்கவும் முடியும்[1].

வினையாக்கிகள்

தொகு

கிளைக்கால் பிளவு வினையில் பெரும்பாலும் பெரயோடிக் அமிலம் (HIO4), ஈயடெட்ரா அசிட்டேட்டு (Pb(OAc)4) ஆகியன வினையாக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வினைகளில் வளைய இடைநிலைகள் பங்கேற்கின்றன. பின்னர் இவை சிதைவடைந்து கீட்டோன் (பக்கச்சங்கிலி ஐதரசன் ஆக இல்லையென்றால்) அல்லது ஆக்டிகைடாக பக்கச்சங்கிலி ஐதரசன் ஆக இருந்தால்) உருவாகின்றன.

 
Pb(OAc)4 உடன் கிளைக்கால் பிளவு வினையில் வளைய இடைநிலை

சூடான அடர் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு (KMnO4) ஒரு ஆல்க்கீனுடன் வினைபுரிந்து கிளைக்காலாக உருவாகிறது. இந்த கிளைக்கால் உடனடியாக பிளவு வினைக்கு உட்பட்டு நிலையான கீட்டோன்களை அல்லது ஆக்சிசனேற்றமடையக்கூடிய ஆல்டிகைடுகளைக் கொடுக்கிறது. இவை மேலும் வினைபுரிந்து கார்பாக்சிலிக் அமிலங்களைத் தருகின்றன. கிளைக்கால் உருவாதலின் போது வினையாக்கிகள் கலவையின் அடர்த்தியையும் வெப்பநிலையையும் கட்டுப்படுத்துகின்றன.

பெரயோடிக் அமில கிளைக்கால் பிளவு வினை மாலாபிராது பெரயோடிக் அமில ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வினை முதன்முதலில் 1934[2] ஆம் ஆண்டு இலியோன் மாலாபிராது என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பீட்டா அமினோ ஆல்ககால்களிலும் இவ்வினை பயனாகிறது[3].

மேற்கோள்கள்

தொகு
  1. Wade, L. G. Organic Chemistry, 6th ed.., Prentice Hall, Upper Saddle River, New Jersey, 2005; pp 358–361, pp 489–490. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-147882-6
  2. L. Malaprade, Bull. Soc. Chim. Fr. 3, 1, 833 1934;
  3. THE ACTION OF PERIODIC ACID ON α-AMINO ALCOHOLS Ben H. Nicolet, Leo A. Shinn J. Am. Chem. Soc., 1939, 61 (6), p 1615 எஆசு:10.1021/ja01875a521

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைக்கால்_பிளவு&oldid=3240297" இலிருந்து மீள்விக்கப்பட்டது