கிழக்கத்திய தகைவிலான்
கிழக்கத்திய தகைவிலான் (அறிவியல் பெயர்: Hirundo rustica gutturalis) என்பது தகைவிலானின் துணையினம் ஆகும். இப்பறவைகள் இமயமலையிலும், கிழக்காசியாவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தத் துணையினத்தை 1786 இல் ஜியோவானி அன்டோனியோ ஸ்கோபோலி விவரித்தார்.[1]
விளக்கம்
தொகுகிழக்கத்திய தகைவிலான் தோற்றத்திலும் பழக்கவழக்கத்திலும் ரசுடிகா தகைவிலானை ஒத்தது. இது அளவில் சற்று சிறியதாக இருப்பதாலும் தொண்டையில் உள்ள செம்பழுப்பு நிறத்தைச் சுற்றி அமைந்துள்ள கருப்புவளையம் நடுவில் முறிந்திருப்பதாலும் இது ஒரு தனி துணையினமாக வகைப்படுத்தபட்டுள்ளது.[2]
பரவலும் வாழிடமும்
தொகுநடு மற்றும் கிழக்கு இமயமலையில் இனப்பெருக்கம் செய்யும் தகைவிலான்கள் கிழக்கத்திய தகைவிலான் கிளையினத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.[3] இருப்பினும் இந்த துணையினமானது முதன்மையாக யப்பானிலும், கொரியாவிலும் இனப்பெருக்கம் செய்கிறது. கிழக்காசியவில் இனப்பெருக்கம் ஆகும் பறவைகள் குளிர்காலத்தில் வெப்பமண்டல ஆசியா முழுவதும் குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கைக்கும்[4] கிழக்கே இந்தோனேசியா மற்றும் நியூ கினி வரை வலசை போகின்றன. இவை தென்னிந்தியாவுக்கும் வலசை வந்து கூட்டம் கூட்டமாக திரியக் காணலாம். கடற்கரை சார்ந்த பகுதிகளில் எங்கும் காண இயலும்.
மேற்கோள்கள்கள்
தொகு- ↑ Edward C. Dickinson; Eck, Siegfried; Christopher M. Milensky (2002). "Systematic notes on Asian birds. 31. Eastern races of the barn swallow Hirundo rustica Linnaeus, 1758". Zoologische Verhandelingen, Leiden 340: 201–203. பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-1652. http://www.repository.naturalis.nl/document/46729. பார்த்த நாள்: 24 November 2007.
- ↑ க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 344–345.
- ↑ Whistler, H (1937). "The breeding Swallow of the Western Himalayas". Ibis 79 (2): 413–415. doi:10.1111/j.1474-919X.1937.tb02182.x.
- ↑ Whistler, H (1940). "The Common Swallow Hirundo rustica rustica in Ceylon". Ibis 82 (3): 539. doi:10.1111/j.1474-919X.1940.tb01671.x.