கிழக்கத்திய நேர வலயம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கிழக்கத்திய நேர வலயம் (Eastern Time Zone, ET, கி.நே.வ) ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள 17 மாநிலங்களிலும் கனடாவின் சில பகுதிகளிலும் தென் அமெரிக்காவில் மூன்று நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
கிழக்கத்திய நேர வலயம் | |
---|---|
(வலதுகோடியில் உள்ள மஞ்சள்) | |
ஒ.அ.நே தள்ளிவைப்பு | |
EST | UTC−5:00 |
EDT | UTC−4:00 |
தற்போதைய நேரம் ( | )|
EST | 12:44 pm on திச 29, 2024 |
பகல்சேமிப்பு நேரப் பயன்பாடு | |
பகல்சேமிப்பு நேரம் இந்த நேரவலயத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மார்ச்சு மாத இரண்டாம் ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை பாவிக்கப்படுகிறது. | |
பசேநே ended | நவம்பர் 3, 2024 |
பசேநே துவங்கியது | Mar 9, 2025 |
கிழக்கத்திய சீர்தர நேரம் (EST) பாவிக்கும் இடங்கள் முன்குளிர்/குளிர் காலங்களில் சீர்தர நேரத்தைப் பேணும்போது ஒருங்கிணைந்த பன்னாட்டு நேரத்திலிருந்து ஐந்து மணி நேரம் பின்தங்கி உள்ளனர் (ஒஅநே−05:00).
கோடை அல்லது இளவேனில் காலத்தில் பகல்பொழுதை சேமிக்கும் வண்ணம் கிழக்கத்திய பகல்சேமிப்பு நேரம் (EDT) பாவிக்கப்படும்போது ஒருங்கிணைந்த பன்னாட்டு நேரத்திலிருந்து நான்கு மணி நேரம் பின்தங்கி உள்ளனர் (ஒஅநே−04:00).
இந்த நேர வலயத்தின் வடக்குப் பகுதிகளில் மார்ச்சு மாதத்தின் இரண்டாம் ஞாயிறன்று விடிகாலை 2:00 மணிக்கு சீர்தர நேர கடிகாரங்கள் பகல்சேமிப்பு நேரம் 3:00 மணிக்கு முன்தள்ளப்படுகின்றன. இதேபோன்று நவம்பர் மாதத்தின் முதல் ஞாயிறன்று விடிகாலை 2:00 மணிக்கு பகல்சேமிப்பு கடிகாரங்கள் 1:00 மணி சீர்தர நேரத்திற்கு பின்தள்ளப்படுகின்றன. தென்பகுதிகளில் உள்ள பனாமா மற்றும் கரீபிய நாடுகளில் இத்தகைய பகல்சேமிப்பு நேரங்கள் பாவிக்கப்படுவதில்லை.