கிழக்கு சகோதரி தீவு

கிழக்கு சகோதரி தீவு ( East Sister Island அல்லது Takoa-te ) என்பது இந்திய ஒன்றியத்தின்,  அந்தமான் தீவுகளைச் சேர்ந்த மக்கள் குடியேற்றமில்லாத டாங்கன் பாதைக்கு வடக்கில் உள்ள ஒரு தீவாகும்.[1] இத்தீவு பாசேஜ் தீவுக்கு 6 கி.மீ தென்கிழக்கிலும், வடக்கு சகோதரன் தீவுக்கு 18 கி.மீ வடக்கிலும் உள்ளது. 

இந்த்த் தீவிவு வடகிழக்கிலிருந்து தென்மேற்கு திசையில்  750 மீட்டர் நீளத்துடனும்,  550 மீட்டர் அகலத்துடன் ஏறக்குறைய செவ்வக வடிவில் உள்ளது. தீவில் பெரும்பாலும் காடுகள் அடர்ந்துள்ளது. தீவின் வடமேற்கு பக்கத்தில் ஒரு கடற்கரையைக் கொண்டும் இதர மூன்று பக்கங்களிலும் கடற்கரையிலும் பாறைகளைக் கொண்டுள்ளது. தீவின் உயரமானப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 93 மீட்டர் உயரத்தில் உள்ளது.[1]

கிழக்கு சகோதரி தீவு மற்றும் சிறிய மேற்கு சகோதரி தீவு ஆகியவை சுமார் 250 மீட்டர் இடைவெளியில் தென்மேற்கில் அமைந்துள்ளன. இதனால் இந்த இரண்டு தீவுகளையும் சகோதரிகள் என அழைக்கப்படுகின்றன.  

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 US Hydrographic Office (1916) Bay of bengal Pilot, page 288.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_சகோதரி_தீவு&oldid=2050655" இலிருந்து மீள்விக்கப்பட்டது