கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம்
மேகாலயத்தில் உள்ள மாவட்டம்
கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம், இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. இதன் தலைமையகம் கிலிரியாத்தில் உள்ளது. இந்த மாவட்டம் 2012ஆம் ஆண்டில், ஜைந்தியா மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம் | |
---|---|
கிழக்கு ஜைந்தியா மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா | |
மாநிலம் | மேகாலயா, இந்தியா |
தலைமையகம் | கிலிரியாத் |
பரப்பு | 2,126 km2 (821 sq mi) |
மக்கட்தொகை | 122436 (2011) |
படிப்பறிவு | 53% |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே. நெ. 44 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இந்த மாவட்டத்தில் கிலிரியாத், சைபுங் ஆகிய இரு மண்டலங்கள் உள்ளன.
இந்த மாவட்டம் 2115 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
- வடக்கு - அசாம், மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்
- தெற்கு - வங்காளதேசம், அசாம்
- கிழக்கு - அசாம்
- மேற்கு - மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்
மக்கள் தொகை
தொகுஇந்த மாவட்டத்தில் 1,22,436 மக்கள் வாழ்கின்றனர். இந்த மாவட்டத்தில் 206 கிராமங்கள் உள்ளன. [1]