சங்ககால அரசர்களில் சிலரும், வள்ளல்களில் சிலரும் கிழான், கிழவன், கிழவோன் அவர்களுடைய நாட்டின் தலைநகரின் அல்லது வாழ்ந்த ஊரின் பெயரோடு சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் கிழார் போல அந்த ஊருக்கு உரியவர்கள். இந்த உரிமை அவர்களுக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். ஒன்று, இந்த உரிமை அந்த ஊர் அல்லது நாட்டு மக்களால் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். அல்லது பேரரசன் ஒருவன் இந்த உரிமையை வழங்கியிருத்தல் வேண்டும்.

வேறுபாடு

  • கிழான் முதலானோர் அரசன் அல்லது வள்ளல்.
  • கிழார் எனபோர் புலவர்கள்

சங்ககாலக் கிழான்மார்

தொகு
  • இலங்கை கிழவோன்
  • ஈந்தூர் கிழான் தோயன்மாறன்
  • கரும்பனூர் கிழான்
  • கொண்கானங் கிழான்
  • சிறுகுடி கிழான் பண்ணன்
  • சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  • நாலை கிழவோன்
  • நாலை கிழவன் நாகன்
  • பொறையாற்றுக் கிழான்
  • போஓர் கிழவோன் பழையன்
  • மல்லி கிழான் காரியாதி
  • மையூர் கிழான்
  • வல்லங் கிழவோன்
  • வல்லார் கிழான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழான்&oldid=1401890" இலிருந்து மீள்விக்கப்பட்டது