கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் உவமை
கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் இயேசு கூறிய உவமான கதையாகும். இது லூக்கா 5:36-40, மத்தேயு 11:17, மாற்கு 2:18-22 இல் காணப்படுகிறது. இது இயேசுவின் சீடர் ஏன் நோன்பிருப்பதில்லை எனக்கேட்டபோது இயேசு அதனை நியாப்படுத்தி சொன்ன உவமையாகும். இது கதை வடிவில் இல்லாமல் உரைநடைவடிவில் அமைந்த உவமையாகும். மேலும் இது விவிலியத்தில் சேர்க்கப்படாத நற்செய்தி நூலான தோமையாரின் நற்செய்தியிலும் காணப்படுகிறது (தோமஸ் 104 மற்றும் 47).[1][2][3]
உவமை
தொகுஎவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும் புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.
அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும். தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார் ஏனெனில்"பழையதே நல்லது" என்பது அவர் கருத்து.
பொருள்
தொகுபழையவை புதியவற்றுடன் சேரமுடியாது என்பது இதன் கருத்தாகும். அதாவது இங்கு புதிய திராட்சை மது அல்லது புதிய துணி கிறித்தவமாகும். அது பழைமையான இசுரவேலில் இணையாது என்பதாகும்.
பிற்குறிப்பு: இறைவனின் கட்டளைப்படி, தாம் எதிர்பார்த்த இறைமகன் இயேசுவின் வருகையின் பின்னர் இஸ்ரவேலர், கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றினார்கள். அவர்களே கிறிஸ்தவர்களின் முன்னோடிகள் ஆவார். (ஆதித்திருச்சபை)
உசாத்துணைகள்
தொகு- தமிழ் விவிலியம் மத்தேயு
- தமிழ் விவிலியம் லூக்கா
- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் உவமைகள்
வெளியிணப்புகள்
தொகு- தமிழ் கிறிஸ்தவ சபை பரணிடப்பட்டது 2006-10-07 at the வந்தவழி இயந்திரம் உவமைகள்
- உவமைகள் பற்றி
மேற்கோள்கள்
தொகு- ↑ Joel B. Green, The Gospel of Luke, Eerdmans, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-2315-7, pp. 248-250.
- ↑ Joseph B. Tyson, Marcion and Luke-Acts: A defining struggle, University of South Carolina Press, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57003-650-0, p. 32.
- ↑ R. T. France, The Gospel According to Matthew: An introduction and commentary, Eerdmans, 1985, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-0063-7, p. 169.