கீச்சேரி ஆறு
கீச்சேரி ஆறு (Kechery River) அல்லது கேச்சேரி புழா என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளுள் ஒன்றாகும். இந்த ஆறு திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மச்சத் மலையில் பிறக்கிறது. இந்த ஆறு சுமார் 51 கிலோமீட்டர் நீளமுடையது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆறு செட்டுவா ஏரி மூலம் அரபிக் கடலில் கலக்கிறது. இது எனாமக்கலில் உள்ள உப்பங்கடல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நதியின் ஒரே துணை நதி சூந்தல் தோடு ஆகும். திரிச்சூர் மாவட்டத்தில் தலப்பிள்ளி வட்டத்தில் சுமார் 3560 ஹெக்டேர் பாசன வசதி இந்த ஆற்றின் மூலம் பெறுகிறது.[1]
கீச்சேரி ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | மச்சாத் மலை |
⁃ ஏற்றம் | 365 m (1,198 அடி) |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | செட்டுவா ஏரி |
நீளம் | 51 km (32 mi) |
வடிநில அளவு | 401 km (249 mi) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "About the Rivers of Kerala". Tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2012-09-18.