கீதா காசியப்பு வெமுகந்தி
கீதா காசியப்பு வெமுகந்தி (Geeta Kashyap Vemuganti) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கண் நோயியல் நிபுணர் ஆவார். ஐதராபாத்து நகரத்திலுள்ள எல்.வி. பிரசாத்து கண் நிறுவனத்தின் கண் நோய்க்குறியியல் சேவையிலும் ஆதார செல் ஆய்வகத்தில் துறைத் தலைவராகவும் இவர் உள்ளார்.[1] ஐதராபாத்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் பள்ளியில் கல்வித் தலைவராகவும் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.[2]
கீதா காசியப்பு வெமுகந்தி Geeta Kashyap Vemuganti | |
---|---|
பிறப்பு | 1 சூலை 1960 தெலங்காணா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | |
பணியிடங்கள் |
|
அறியப்படுவது | ஆதார செல் சிகிச்சையில் ஆய்வுகள் |
விருதுகள் |
|
வெமுகந்தி ஆதார செல் சிகிச்சையில் முன்னோடியாக பணியாற்றினார். மனிதர்களுக்கு பார்வையை மீட்டெடுப்பதற்காக வளர்ப்பு ஆதார செல்களை இடமாற்றம் செய்வதற்கான நெறிமுறையை உருவாக்கிய வி.எசு. சங்வான் தலைமையிலான குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.[3] தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார்.[4] 2005 ஆம் ஆண்டு கெம் டெக் அறக்கட்டளை விருதைப் பெற்றார். இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை, 2004 ஆம் ஆண்டில் உயிரியலில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, தொழில் வளர்ச்சிக்கான தேசிய உயிரியல் விருதை இவருக்கு வழங்கியது. இது இந்தியாவின் மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றாகும்.[5]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Scientists chosen for awards" (in en). The Hindu Business Line. 2005-02-08. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-economy/scientists-chosen-for-awards/article2167889.ece.
- ↑ "PLENARY SESSIONS". www.caimsnmss.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 26 January 2018. பார்க்கப்பட்ட நாள் 2017-12-16.
- ↑ "Breakthrough in stem cell transplantation of eye". தி இந்து. 31 October 2001. http://www.thehindu.com/2001/10/31/stories/0231000q.htm.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "List of Fellows: October 2007" (PDF). National Academy of Medical Sciences. 2007. பார்க்கப்பட்ட நாள் 2017-12-16.
- ↑ "Awardees of National Bioscience Awards for Career Development" (PDF). Department of Biotechnology. 2016. Archived from the original (PDF) on 4 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
புற இணைப்புகள்
தொகு- "Geeta K Vemuganti - University of Hyderabad" (YouTube video). HYBIZTV HD. 23 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-12-16.
- "Sandhya Janak with EMMRC presenting Dr. Geetha Kashyap Vemuganti" (YouTube video). Sandhya Janak. 23 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2017-12-16.