கீதா கோபி
இந்திய அரசியல்வாதி
கீதா கோபி (Geetha Gopi) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கீதா கோபி புன்னையர்குளத்தில் 1973 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியன்று பிறந்தார். திருச்சூரைச் சேர்ந்த இவர் நாட்டிகா தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2] தனது அரசியல் பயணத்தை 1995 ஆம் ஆண்டு முதல் கீதா கோபி தொடங்கினார்.[2] 2004 ஆம் ஆண்டில் குருவாயூர் பேரூராட்சியின் தலைவராகவும் இவர் இருந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டிலும், 2011 ஆம் ஆண்டிலும் இதே பேரூராட்சியில் துணைத் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.[2]
கீதா கோபி Geetha Gopi | |
---|---|
சட்டமன்ற ய்றுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 சூன் 2011 | |
தொகுதி | நாட்டிக்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 மே 1973 புன்னையூர்குளம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | கே. கோபி |
பிள்ளைகள் | ஒரு மகன், ஒரு மகள் |
2017 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று தனது மகளின் ஆடம்பர திருமணத்தில் கலந்து கொண்டதற்காக கட்சி கோபிக்கு எச்சரிக்கை விடுத்தது.[3]