கீதா சானே
கீதா ஜனார்தன் சானே (Geeta Janardan Sane தேவநாகரி : गीता जनार्दन साने) (1907 – 1991) இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பெண்ணிய எழுத்தாளர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசானே அமராவதியில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆசிரியராக இருந்தார், பின்னர் அவர் ஒரு வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். சானேவின் பெற்றோர் இருவரும் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் ஆவர். அவர்கள் தங்கள் மகள்களின் திருமணங்களை எந்த மத சடங்குகளும் இல்லாமல் நடத்தினர்.
நாக்பூர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில், சானே அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார். இவருக்கு முன்பு, அந்த பல்கலைக்கழகத்தில் பெண்கள், அந்தக் காலங்களில் இந்தியாவின் பிற பல்கலைக்கழகங்களைப் போலவே, கலைப் பிரிவுகளையே பெரும்பாலும் பயின்றனர். பட்டம் பெற்ற பிறகு, இவர் கணிதம் கற்பித்தார்.
முற்போக்கான கருத்துக்கள்
தொகுதனது கல்லூரி நாட்களில், சானே மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டாரை.
ஒரு பெண்ணியவாதியாக, இவர் பெண்வழி திருமண முறையை ஆதரித்தார். 26 வயதில் நரசிம்ம தகம்வர் என்ற வழக்கறிஞரை மணந்த பின்னர் தனது கடைசி பெயரான சானேவை தக்க வைத்துக் கொண்டார், மகாராஷ்டிராவில் திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியில் ஒரு குக்கா புள்ளியை வைப்பது மற்றும் அவர்களின் புனித திருமண நிலைக்கு அடையாளமாக ஒரு மங்கல்சூத்ராவை அணிவது போன்ற சமூக வழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
படைப்புரிமை
தொகுபின்வருவது அவரது சில புதினங்கள், அவற்றில் பெரும்பாலானவை பெண்ணிய கருப்பொருள்களைக் கொண்டன.
- நிகாலதி ஹிரகானி (निखळती) (1935)
- வதலேலா வ்ருக்ஷா (वठलेला) (1936)
- ஹிராவலிகாலி (हिरवळीखाली) (1936)
- அவிஷ்கர் (आविष्कार) (1939)
- பெரிவாலா (फेरीवाला) (1939)
- துக் அனி தாஹி.நார் (धुके आणि दहिंवर) (1942)
- தீபஸ்தம்பா (दीपस्तम्भ) (1950)
சான்றுகள்
தொகு- https://books.google.com/books?id=u297RJP9gvwC&pg=PA446&lpg=PA446&dq=Vidya+Bal+writer&source=bl&ots=dmFw7DXqHP&sig=zvWsRv-lVN3N8Q5sW4VfzLqXIgo&hl=en&ei=I5Y4SsK_I5PgtgOs_5H-Bg&sa=X&oi=book_result&ct=result&resnum=3#PPA446, எம் 1
- https://books.google.com/books?id=sqBjpV9OzcsC&pg=PA347&lpg=PA347&dq=Geeta+Sane&source=bl&ots=D8aby0hfIi&sig=QiedHhv2iW432vRdvvCq9i_9eLo&hl=en&ei=95I4SoDQGJOqtgPKrfj8Dg&sa=X&oi=book_result&ct=result&resnum=5#PPA347,M1