கீநோட் (இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள்)

கீநோட் (Keynote) என்பது ஓர் இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் ஆகும். இது அப்பிள் நிறுவனத்தின் ஐவேர்க் உற்பத்தித் திறன் தொகுப்புச் செயலிகளில் இதுவும் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதியன்று கீநோட் 6.0 எனும் புதிய மக் பதிப்பு வெளியிடப்பட்டது.[1] புதிய தொடுதிரை இடைமுகத்துடன் கூடிய ஐபாட்டுக்களுக்கான செயலி சனவரி, 27, 2010 அன்று அறிவிக்கப்பட்டது. [2]

கீநோட்
உருவாக்குனர் ஆப்பிள் நிறுவனம்
பிந்தைய பதிப்பு 6.6.1 / நவம்பர் 11 2015 (2015-11-11); 1540 தினங்களுக்கு முன்னதாக
இயக்குதளம் ஓஎஸ் எக்ஸ்
வகை இலத்திரனியல் நிகழ்த்துகை
அனுமதி மூடிய மூலம்
இணையத்தளம் www.apple.com/mac/keynote/

வரலாறுதொகு

அப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் ஜொப்ஸ் தனது சொந்த இலத்திரனியல் நிகழ்த்துகைகளை மக்வேர்ல்ட் அல்லது ஐவேர்ல்ட் எனக் குறிப்பிடப்படும் அப்பிள் நிறுவன மாநாட்டில் காட்சிப்படுத்துவதற்காக இந்நிகழ்த்துகை மென்பொருளைப் பயன்படுத்தினார்.[3] பின்னர் மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் போன்ற இதர இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருட்களுக்குப் போட்டியாக 2003 ஆம் ஆண்டில் கீநோட் 1.0 எனும் பதிப்பில் இம்மென்பொருள் விற்பனைக்கு வந்தது. மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் மென்பொருளிற்கு மேலதிகமாக இங்கு காணப்படும் சிறப்பம்சமானது எவ்வகைப் புகைப்படங்களையும் உள்ளடக்குதல் ஆகும். அத்துடன் இயங்குபடத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இம்மென்பொருள் பல்வேறு இயங்குபடப் புகைப்படங்களை வடிவமைக்கும், மேம்படுத்தும் வசதிகளையும் தருகின்றது.

மேற்கோள்கள்தொகு