கீரனூர் (இராமநாதபுரம்)
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்
கீரனூர் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள சிற்றூராகும். இது முதுகுளத்தூரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பல்வேறு இன, மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சமத்துவ கிராமமாகத் திகழ்கிறது. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இரு பள்ளியிலும் சேர்த்து சுமார் 150 மாணவ, மாணவியர் பயின்று வருகிறார்கள்.
மக்கள் பரம்பல்
தொகுமுதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராமத்தின் மொத்த மக்கட்தொகை 1,905ஆகும். அதில் ஆண்கள் 975 ஆகவும், பெண்கள் 930 ஆகவும் உள்ளனர். தலித்துகள் தொகை 383 ஆக உள்ளது. [1]