கீரனைக் கரையேற்றிய படலம்

கீரனைக் கரையேற்றிய படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 53ஆவது படலமாகும். இப்படலம் தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

சுருக்கம்

தொகு

சிவபெருமான் இறைவியின் கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை என வாதாடிய நக்கீரரை நெற்றிக் கண்ணால் எரித்தார். அவரை மீண்டும் உயிரிப்பித்து சங்கத்திற்கு அளிக்க அரசனும், அவையினரும் சிவபெருமானிடம் வேண்டினர். அதனால் சிவபெருமான் பொற்றாமைக் குளத்திலிருந்து எழுந்து வர நக்கீரனை அழைத்தார். நக்கீரன் உயிர்பெற்று வந்தார். திருக்காளத்தியர் மீது நேரிசை வெண்பாவினால் கயிலை பாதி, காளத்தி பாதி எனும் அந்தாதியை பாடினார். இறைவனின் கோபத்தினை பிரசாதமாக கருதி கோபப்பிரசாதம் எனும் பாமாலையைப் பாடினார். [1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு