கீர் ஹார்டி

ஜேம்ஸ் கியர் ஹார்டி (James Keir Hardie, 15 ஆகஸ்ட் 1856 - 26 செப்டம்பர் 1915) ஒரு இசுகாட்டிய பொதுவுடைமைவாதியும் தொழிற்சங்கவாதியும் அரசியல்வாதியும் ஆவார். தொழிற்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவரான இவர் 1906 லிருந்து 1908 வரை அதன் முதல் நாடாளுமன்றத் தலைவராகப் பணியாற்றினார்.

கியர் ஹார்டி
1905 ல் ஹார்டி
தொழிற் கட்சித் தலைவர்
பதவியில்
17 சனவரி 1906 – 22 சனவரி 1908
முதன்மைக் கொறடாடேவிட் ஷேக்கல்ட்டன்
ஆர்த்தர் ஹெண்டர்சன்
ஜார்ஜ் ஹென்றி ராபர்ட்ஸ்
முன்னையவர்அலுவல் உருவாக்கப்பட்டது
பின்னவர்ஆர்த்தர் ஹெண்டர்சன்
நாடாளுமன்ற உறுப்பினர்
மெர்திர் டிட்பில்
பதவியில்
24 அக்டோபர் 1900 – 26 செப்டம்பர் 1915
Serving with எட்கர் ரீஸ் ஜோன்ஸ் (1910–1915)
முன்னையவர்வில்லியம் பிரிச்சார்ட் மார்கன்
பின்னவர்சார்லஸ் ஸ்டேன்டன்
நாடாளுமன்ற உறுப்பினர்
வெஸ்ட் ஹாம் தெற்கு
பதவியில்
26 யூலை 1892 – 7 ஆகத்து 1895
முன்னையவர்ஜார்ஜ் பேண்ஸ்
பின்னவர்ஜார்ஜ் பேண்ஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜேம்ஸ் கியர் ஹார்ட

15 ஆகத்து 1856
நியூஹௌஸ், லனார்க்சைர், இசுக்கொட்லாந்து
இறப்பு26 செப்டம்பர் 1915(1915-09-26) (அகவை 59)
கிளாஸ்கோ, லனார்க்சைர், இசுக்கொட்லாந்து
அரசியல் கட்சிதொழிற் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஸ்காட்டிய தொழிற் கட்சி
சார்பற்ற தொழிலாளர் கட்சி
துணைவர்
லில்லியாஸ் பல்பூர் வில்சன் (தி. 1880)
பிள்ளைகள்4

தொடக்க காலம்

தொகு

ஹார்டி லனார்க்சைரிலுள்ள நியூஹௌசில் பிறந்தார். தனது ஏழு வயதிலிருந்து பணிபுரியத் தொடங்கியவர், பத்தாவது வயதில லனார்க்சைர் நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரியலானார்.[1] அதே காலகட்டத்தில் ஹோல்டௌனிலிருந்த இரவுப் பள்ளியில் பயிலத் தொடங்கினார். பரப்புரையில் ஆர்மிக்க அவர் திறமையான பேச்சாளராக அறியப்பட்டார். தனது இருபதாவது வயதுக்குள் இயன்முறையில் திறமையான சுரங்கத் தொழிலாளியான அவர், 1879 ல் தொழிற்சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1881 ஆம் ஆண்டு ஐர்சைர் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்குத் தலைமையேற்றார். அந்த வேலை நிறுத்தம் தோல்வியுற்றாலும் நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்தியது, அவை பிற்காலத் தொழில்துறை விளைவுகளைக் கருத்தில் கொண்டு சலுகைகள் வழங்கக் காரணியாயின.[2]

ஹார்டி பல ஆண்டுகளாக ஒற்றை வரி இயக்கமென அறியப்படும் ஜோர்ஜியராகவும், இசுகாட்டிய நில மீட்டெடுப்புக் குழவின் உறுப்பினராகவும் இருந்தார். நில ஏகபோகத்தில் ஒற்றை வரியின் வி்ளைவுகளை உணர்ந்து, ஹார்டி கிளர்ச்சியாலல்லாமல் மக்கள் சீர்திருத்தத்தின் மூலமாகவே மக்களாட்சிப் பொதுவுடமைக் கருத்துகளை முன்னடு்க்க முடியுமென்ற கொள்கை கொண்ட ஃபேபியன் பொதுவுடைமையாளராக மாறினார். எப்படி இருந்தாலும், மாநிலளவுப் பொதுவுடைமை என்பது குறிக்கோளின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தின் தேவையாக உள்ளது என்ற எண்ணம் கொண்டிருந்தார.[3]

அரசியல் வாழ்வு

தொகு

வெஸ்ட் ஹாம் தெற்கு நாடாளுமன்ற தொகுதியிலிருந்து 1892 ல் கட்சிசார்பற்ற வேட்பாளராக வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டு சார்பற்ற தொழிலாளர் கட்சி (ILP) அமைக்க உதவினார். 1895 ல் தோல்வியுற்றாலும் 1900 ஆம் ஆண்டு தெற்கு வேல்சிலன் மெர்திர் டிட்பில்லிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் அவர் தொழிற்சங்கத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர் சார்ந்தாற்றும் செயற்குழுவை உருவாக்க உதவினார், இதுவே பின்னர் தொழிற்கட்சி என மறுபெயரிட்டது. சார்பற்ற தொழிலாளர் கட்சி 1906 முதல் 1932 வரை தொழிற்கட்சியுடன் இணைந்திருந்தது.

1906 ஆண்டுத் தேர்தலுக்குப்பின் ஹார்டி தொழிற்கட்சியின் நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்த்தர் ஹெண்டர்சனுக்காக தன் பதவியை 1908 ஆம் ஆண்டு துறந்தார். பிறகு இவர் பெண்களுக்கு வாக்குரிமை,[4] இந்தியாவிற்கு தன்னாட்சி, ஸ்காட்லாந்திற்கான குடியாட்சி, முதலாம் உலகப் போர் நிறுத்தம் போன்றவற்றுக்காகக் களமாடினார்.

முதலாம் உலகப் போரை நிறுத்தும் நோக்கில், 1915 ஆம் ஆண்டு அவர் அமைதிப் பொது வேலைநிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்யும் வேளையில் தொடர் மாரடைப்புகளால் இன்னலுற்று நுரையீரல் அழற்சியால் இறந்தார். அவரது உடல் கிளாஸ்கோவில் உள்ள மேரிஹாலில் புதைக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Stewart 1925, ப. 6–7.
  2. David Day (2008). Andrew Fisher: Prime Minister of Australia. Fourth Estate. p. 23.
  3. "Socialism in England: James Keir Hardie Declares that it is Capturing that Country". The San Francisco Call 78 (117): p. 9. 25 September 1895. http://cdnc.ucr.edu/cgi-bin/cdnc?a=d&d=SFC18950925.2.136.  Hardie states, "I was a very enthusiastic single-taxer for a number of years."
  4. Elizabeth Crawford (2 September 2003). The Women's Suffrage Movement: A Reference Guide 1866-1928. Routledge. pp. 669–670. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-135-43402-6.
  5. Oxford Dictionary of National Biography, Volume 25. Oxford University Press. 2004. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-861375-X.Article by Kenneth O. Morgan.

நூற்பட்டியல்

தொகு
  • Stewart, William (1925). J. Keir Hardie: A Biography (rev. ed.). London: Independent Labour Party Publication Department.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்_ஹார்டி&oldid=3858690" இலிருந்து மீள்விக்கப்பட்டது