கீழத்தஞ்சாவூர் ஸ்ரீமூலநாதர் கோயில்
கீழத்தஞ்சாவூர் ஸ்ரீமூலநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுதிருவாரூர்-திருமருகல்-(வழி) கங்களாஞ்சேரி-திருப்பயத்தங்குடி அடுத்து, புத்தகரம் உள்ளது. அங்கிருந்து வலப்புறத்தில் உள்ளது. கீழத்தஞ்சாவூர் என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் ஸ்ரீமூலநாதர் ஆவார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுதிருச்சுற்றில் மகாலட்சுமி, பைரவர், சந்திரன், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன. இத்தலம் செருத்துணை நாயனார் அவதரித்த தலமாகும். [1]