கீழே இறக்கப்பட்ட வழிகாட்டி

கீழே இறக்கப்பட்ட வழிகாட்டி (Dropping the Pilot) 29 மார்ச் 1890 அன்று சர் ஜான் டெலிலால் வரையப்பட்டு, ’பன்ச்’ என்ற பிரித்தானிய பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு அரசியல் கேலிச் சித்திரம். இது ஜனாதிபதி ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் ஒரு கப்பலில் இருந்து வெளியேறுவதை ஜெர்மன் பேரரசர் வில்ஹெல்ம் II நோக்குவதாக உள்ளது. பிஸ்மார்க் மற்றும் வில்ஹெல்ம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஓட்டோ வொன் பிஸ்மார்க் ராஜினாமா செய்தார்[1][2]. ராஜினாமா செய்த பின் அவர் ஹாம்பர்க் அருகில் உள்ள எஸ்டேடில் 1898 ஜூலை 30ஆம் தேதி இறந்தார்[3].

’கீழே இறக்கப்பட்ட வழிகாட்டி’-கேலிச் சித்திரம்

இந்த கேலிச்சித்திரம் ஜெர்மனியில் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இது அங்கு வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. The Times, London: Times Newspapers Ltd., March 19, 1890.
  2. The New York Times, New York: The New York Times Company, March 19, 1890.
  3. ["http://www.bbc.co.uk/history/historic_figures/bismarck_otto_von.shtml" Otto Eduard Leopold von Bismarck>