கீழ்க்குவளைவேடு சப்தமாதர் கோயில்
கீழ்க்குவளைவேடு சப்தமாதர்கள் கோயில் என்பது தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி கீழ்க்குவளைவேடு கிராமத்தில் அமைந்துள்ள அம்மன் கோவிலாகும். [1]
தல வரலாறு
தொகுசும்ப, நிசும்பர்களை வதம் செய்ய ஆதிசக்தி தோன்றினாள். அவள் உடலில் இருந்து கருமை நிறம் கொண்ட மஹாகோர ரூபிணியான கெளசிகை காளராத்ரி என்றழைக்கப்பட்ட பத்ரகாளியைத் தோற்றுவித்தாள்.
பத்ரக்காளியும், ஆதிசக்தியும் சும்ப, நிசும்பர்களின் தலைநகரை அடைந்து ஒரு பூங்காவில் தங்கினர். அங்கே அன்னை அற்புதமாய் பாட அவ்வழியே சென்ற சண்ட, முண்டர்கள் ஈர்க்கப்பட்டு அவள் அழகில் மயங்கினர்.
அன்னையின் பேரழகைப் பற்றி சண்ட முண்டர்கள் கூறக்கேட்ட அசுர மன்னன் சும்பன் அவளை மணக்க விரும்பி தன்னமைச்சன் சுக்ரீவனைத் தூதனுப்பினாள். அன்னை தன்னைப் போாில் வெல்பவரையே தான் மணக்க இருப்பதால் போருக்கு வரும்படி சும்பனுக்கு சொல்லி அனுப்பினாள்.
முதலில் போருக்கு வந்த தூம்ரலோசனன், போாில் அன்னையால் சாம்பலாக்கப்பட்டான். தொடர்ந்து சண்ட, முண்டர் போருக்கு வந்தனர். போாில் கோபத்தால் அன்னையின் முகம் கருத்தது. அதில் இருந்து தோன்றிய காளி சண்ட, முண்டர்களை அழித்தார். அன்னை சாமுண்டி என அழைக்கப்பட்டாள்.
தொடர்ந்து இரக்தபீஜன் போருக்கு வந்தான். உக்கிரமாகப் போர் தொடர்ந்தது. அப்போது அன்னைக்குத் துணையாய் பிரம்மசக்தி பிராம்மியாகவும், ருத்ரசக்தி ரெளத்ரி என்னும் மகேஸ்வாியாகவும், முருகசக்தி கெளமாாியாவும், விஷ்ணுசக்தி வைஷ்ணவியாகவும், ஆதிசக்தி வராஹி ஆகவும், இந்திரசக்தி மாஹேந்திாியாகவும் தோன்றி போர் புாிந்தனர்.
இறுதியில் சும்ப, நிசும்பர்களை வதம் செய்ததும் காளியான சாமுண்டியோடு இவ்வறுவரும் சப்தமாக்களாய் அருள்பாலித்து வருகின்றனர்.
எண்ணங்களாய் பிராமியும், இயக்கமாய் மகேஸ்வாியும், நோயற்ற இன்ப வாழ்வாய் கெளமாாியும், அழகும் செவ்வையாம் மனநிறைவுமாய் வைஷ்ணவியும்,செயலூக்கமாய் வராஹியும்,செம்மாந்த புகழாய் மாஹேந்திாியும், காாிய வெற்றியாய் சாமுண்டியும், சப்த மாதாக்களாய் இருந்து அருள்புாிந்து வருகின்றனர்.
சிலை அமைப்பு
தொகு'சப்தமாதர்' எனப்படுவோர் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆவர்.
இக்கோவிலில் சப்த மாதாக்களில் சாமுண்டி இல்லை. மேலும் ஞானத்தடி ஏந்திய ஞான வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் காணப்படுகின்றனர்.
பொதுவாக சப்த மாதாக்களில் சாமுண்டியைப் பிரதான தெய்வமாக நடுவில் அமைக்கும் வழக்கம் காணப்பட்டாலும் இங்கு வைஷ்ணவியாகிய செல்லியே பிரதான தெய்வமாக வீற்றிருக்கிறாள். இவர்களோடு உடனிருக்கும் வீரபத்திரர் கையிலோ மந்திரக்கோலுடன் இருக்கிறார்.
சன்னதிகள்
தொகுமுருகப் பெருமானுக்கும், விநாயகருக்கும் தனியே சந்திதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழாக்கள்
தொகுஒவ்வொரு மாதமும் அமாவாசை, பெளர்ணமி தினங்களில் சப்த மாதாக்களுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூசைகளும் சிறப்பு ஹோமங்களும் நடத்தப்படுகின்றன. சித்ராபெளர்ணமி நாளன்று சிறப்பு பூசைகள் நடைபெற்று வருகிறது.
பலன்கள்
தொகுஇந்த கடவுள்களை வழிபட்டால் குடும்ப ஒற்றுமை, மன அமைதி, குழந்தை வரம் ஆகியவை கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "செல்லியம்மன் கோயிலில் மஹா சண்டி யாகம்". Dinamani.