மகேசுவரி (சப்தகன்னியர்)

மகேசுவரி என்பவர் இந்து சமயத்தின் சப்தகன்னியர்களுள் இரண்டாவதாக விளங்குபவராவார். பராசக்தியின் தோளிலிருந்து தோன்றியவள்.

இவர் மகேசுவரானாகிய சிவபெருமானின் அம்சமாவார். இவர் சிவபெருமானைப் போன்று முக்கண்ணும், ஐந்து திருமுகமும் உடையவர். கரங்களில் பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு என்ற ஐந்து ஆயுதங்களை தரித்தும், ரிசபத்தினை வாகனமாக கொண்டவர்.

வடகிழக்கு என்று கூறப்படும் ஈசான திசையை நிர்வாகம் செய்பவளாக மகேஸ்வரி கூறப்படுகின்றாள்.

இவளுடைய காயத்திரி மந்திரம்

'ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’

என்று இவளைப் போற்றுகின்றது. இதனால் இவள் வெள்ளை நிறம் உடையவள் என்பதும் சூலத்தை ஆயுதமாகக் கொண்டவள் என்பதும் புலனாகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேசுவரி_(சப்தகன்னியர்)&oldid=3754554" இலிருந்து மீள்விக்கப்பட்டது