கீழ ராஜ வீதி (புதுக்கோட்டை)

கீழ ராஜ வீதி என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை நகராட்சியில் அமைந்துள்ள முக்கிய வீதியாகும். புதுக்கோட்டையின் பெரும்பான்மையான வணிக நிறுவனங்கள், முக்கிய வங்கிகள் [1] இந்த வீதியில் அமைந்துள்ளதால் புதுக்கோட்டையின் வணிகப்பாிமாற்றம் அதிகம் நடைபெறும் இடமாக இது இருக்கிறது.[2] [3]

கீழ ராஜ வீதி பெயர்ப்பலகை, புதுக்கோட்டை

அமைப்பு

தொகு
 
கீழ ராஜ வீதி - வடக்கு வாயில், புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரானது மன்னராட்சி காலத்தில் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாதலால் இந்த கீழ ராஜ வீதி வடக்கு தெற்காக சுமார் 1 கிலோ மீட்டர் நீளத்தில் ஒரே நேராக அமைந்துள்ளது.

போக்குவரத்து

தொகு

மக்கள் அதிகம் கூடும் சாலை என்பதால் பெறும்பாலான நேரங்களில் சரக்குந்து, பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்ட வீதியாகும். காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது[4]. இருசக்கர வாகனங்களுக்கும், மகிழுந்துகளுக்கும் இவ்வீதியில் செல்ல அனுமதி உண்டு. இருப்பினும் பொங்கல், தீபாவளி காலங்களில் எந்த வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

 
கீழ ராஜ வீதி - தெற்கு, புதுக்கோட்டை

மேற்கோள்கள்

தொகு