கீவ் நாள்

உக்ரைன் நாட்டில் அனுசரிக்கப்பட்டும் ஓர் சிறப்பு நாள்

கீவ் நாள் (Kyiv Day) உக்ரைன் நாட்டின் தலைநகரமான கீவ் நகரில் அனுசரிக்கப்பட்டும் ஒரு சிறப்பு நாளாகும். பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை அன்று இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.[1] உக்ரைன் முழுவதும் பல நகரங்கள் மற்றும் ஊர்களில் கொண்டாடப்படும் பிற விடுமுறை நாட்களைப் போலவே கீவ் நாளும் கொண்டாடப்படுகிறது.[1] மே மாதத்தின் கடைசி வார இறுதியில் கொண்டாட்டங்கள் பொதுவாக இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் இந்த நாளில் தெருக்களில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.[1][2] நகரவாசிகளும் புறநகர் சுற்றுலாப் பயணிகளும் இந்நிகழ்ச்சிகளையும் மாலையில் கிழக்கு ஐரோப்பிய நேரப்படி சுமார் 22:00 மணிக்கு நடைபெறும் வானவேடிக்கை நிகழ்ச்சிகளையும் காண கீவ் நகரத்திற்குச் செல்கிறார்கள். கீவ் நாளின் முதல் கொண்டாட்டம் மே 1982 ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது.[1][3] இது கீவ் நகரம் உருவாகிய 1500 ஆவது ஆண்டு விழாவைக் குறித்தது.

கீவ் நாள்
Kyiv Day
(День Києва)
அதிகாரப்பூர்வ பெயர்கீவ் நாள்
கடைப்பிடிப்போர்கீவ் குடிமக்கள்
தொடக்கம்மே மாத கடைசி ஞாயிறு
நிகழ்வுஆண்டுதோறும்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Ukrainian Holidays". Kiev.inf. பார்க்கப்பட்ட நாள் 2009-06-29.
  2. "The Day of Kyiv". destinations.com.ua (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-23.
  3. "Kiev Day in Ukraine". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-23.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீவ்_நாள்&oldid=3842772" இலிருந்து மீள்விக்கப்பட்டது