கீவ் மாநகரப் பாலம்

 

கீவ் மாநகரப் பாலம்
Міст Метро
கீவ் மாநகரப் பாலம்
அதிகாரப் பூர்வ பெயர் கீவ் மாநகரப் பாலம்
போக்குவரத்து மாநகர தொடரி
சாலை
தாண்டுவது டினீப்பர் ஆறு
இடம் கீவ், உக்ரைன்
வடிவமைப்பாளர் பியூக்ஸ்
மொத்த நீளம் 700 மீட்டர்கள் (2,300 அடி)
திறப்பு நாள் நவம்பர் 5, 1965; 58 ஆண்டுகள் முன்னர் (1965-11-05)
பின் வந்தது பேட்டன் பாலம்

கீவ் மாநகரப் பாலம் (உக்ரைனியன்: Міст Метро) உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில் டினீப்பர் ஆற்றின் குறுக்கே இருக்கும் ஒரு பாலமாகும். இது பியூக்ஸ் மற்றும் இனோசோவ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டில் இந்தப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கீவ் நகரின் மாநகர தொடரி மற்றும் சாலை போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

கண்ணோட்டம் தொகு

இந்த பாலம் 683 மீட்டர் நீளமும், 28.9 மீட்டர் அகலமும், ஆற்றிலிருந்து 20 மீட்டர் உயரமும் கொண்டது.[1][2]

இது டினீப்பர் ஆற்றின் இடது மற்றும் வலது கரைகளை இணைக்கின்றது. இந்த பாலம் கீவ் நகரின் மாநகர தொடரி மற்றும் சாலை போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆற்றின் நடுவே உள்ள வெனெட்சிஸ்கி தீவை கரையுடன் இணைக்கின்றது.

விபத்துகள் தொகு

செப்டம்பர் 18, 2019 பயங்கரவாதிகள் பலத்தை ஆக்கிரமித்துக்கொண்டனர்.[3] அதில் ஒருவர் பாலத்தை வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தினார்.[4][5]அந்த நபர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, சில மணி நேரம் பாலத்தின் குறுக்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டது, இதனால் நகரம் முழுவதும் விரிவான போக்குவரத்து சிக்கல்கள் ஏற்பட்டன. அவரிடம் எந்த வெடிபொருளும் இல்லை, ஒரு துப்பாக்கி மட்டுமே இருந்தது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Rozdorozhnya, Anna (21 April 2013). "Pont Métro". Unique. Archived from the original on 15 December 2018. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  2. "Features of the technical condition and capital repair of the Metro bridge over the Dnipro river". Dorig. 10 July 2019. Archived from the original on 14 November 2020. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  3. "Oleksiy Belko - who is he and why does he want to blow up the Metro bridge". kyivnews. பார்க்கப்பட்ட நாள் 2021-04-07.
  4. "The "miner" of the Metro bridge in Kyiv was detained. Operation video". Ukrainian Truth. பார்க்கப்பட்ட நாள் 2021-04-07.
  5. "Miner of the Metro bridge". Pravda. பார்க்கப்பட்ட நாள் 2021-04-07.
  6. "Miner of the Metro bridge asked for forgiveness from Kyiv, he will not be charged with preparing a terrorist attack". LB.ua. பார்க்கப்பட்ட நாள் 2021-04-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீவ்_மாநகரப்_பாலம்&oldid=3918181" இலிருந்து மீள்விக்கப்பட்டது