குக்ரி முக்ரி

குக்ரி முக்ரி (Kukri Mukri) என்பது வங்காளதேசத்தின் தென் பகுதியிலுள்ள போலா மாவட்டத்தில் உள்ள சார் குக்ரி முக்ரி ஒன்றியத்தின் ஒரு தீவு ஆகும்.[1][2] இத்தீவு போலோ மாவட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது.[3] தீவின் பரப்பளவு சுமார் 25 சதுர கிலோமீட்டர் ஆகும். தீவின் மொத்த நீளம் 10 கிலோமீட்டரும் (6.2 மைல்) அகலம் 9.5 கிலோமீட்டர் (5.9 மைல்) அளவும் கொண்டுள்ளது. தீவின் நிலப்பகுதி மிகவும் தாழ்வாக அமைந்துள்ளதால் கரையின் பெரும்பகுதி சேறும் சகதியுமாக உள்ளது. சார் குக்ரி-முக்ரி வனவிலங்கு சரணாலயம் ஒன்றும் இந்த தீவில் அமைந்துள்ளது.[4] தனிமைப்படுத்தப்பட்ட இத்தீவில் 8,000 பேர் வசிக்கின்றனர். கரையோரங்களில் உள்ள நீர்நிலைகளில் மீன் மற்றும் காய்கறி சாகுபடி செய்து வரும் இவர்கள் தங்களது தேவைகளை மட்டுமின்றி மற்ற தீவுவாசிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு வெளியில் விற்பனை செய்து வருகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Unionsdigitised". The Daily Star (in ஆங்கிலம்). 12 November 2010. பார்க்கப்பட்ட நாள் 18 April 2017.
  2. "Counting Birds on the Coast". The Daily Star (in ஆங்கிலம்). 24 January 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2017.
  3. "Eight reservoirs change scenario of Char Kukri Mukri". The Daily Star (in ஆங்கிலம்). 6 December 2014. பார்க்கப்பட்ட நாள் 18 April 2017.
  4. Green, Michael J.B. (1990). IUCN directory of South Asian Protected Areas. IUCN. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:2-8317-0030-2. https://wedocs.unep.org/bitstream/handle/20.500.11822/8084/IUCN_directory_South_Asian_Protected_Areas.pdf?sequence=3&isAllowed=y. பார்த்த நாள்: 5 December 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்ரி_முக்ரி&oldid=3617157" இலிருந்து மீள்விக்கப்பட்டது