போலா மாவட்டம்
போலா மாவட்டம் (Bhola District) (வங்காள மொழி: ভোলাப் தெற்காசியாவின் தென்மத்திய வங்காளதே நாட்டில் அமைந்த அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். பரிசால் வருவாய்க் கோட்டத்தில் 3403.48 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட போலா மாவட்டத்தில் போலா தீவு எனும் பெரிய தீவுப் பகுதியும் உள்ளடக்கியது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் போலா நகரம் ஆகும்.[1]
எல்லைகள்
தொகுபோலா மாவட்டத்தின் வடக்கில் லெட்சுமிபூர் மாவட்டம் மற்றும் பரிசால் மாவட்டமும், தெற்கில் வங்காள விரிகுடாவும், கிழக்கில் லெட்சுமிபூர் மாவட்டம், நவகாளி மாவட்டம் மற்றும் மெக்னா ஆறும், மேற்கில் பதுவாகாளி மாவட்டம் மற்றும் தேதுலியா மாவட்டங்களும் எல்லைகளாகக் கொண்டது.[2] இம்மாவட்டத்தின் கச்சியா எனுமிடத்தில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிலவியல்
தொகுஇம்மாவட்டத்தின் தீவுக்கூட்டங்களின் பெயர்கள்: போலா தீவு, மன்புரா தீவு, தல் சார் தீவு மற்றும் குக்ரி முக்ரி தீவுகள் ஆகும்.
மாவட்ட நிர்வாகம்
தொகுபோலா மாவட்டம் ஏழு துணை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்: போலா சதர், புர்கானுத்தீன், தாஜுமுத்தீன், லால்மோகன், சார் பஸ்சான் மற்றும் மன்புரா ஆகும். மேலும் 68 ஊராட்சி ஒன்றியங்களும், 438 கிராமங்களும் கொண்டள்ளது.
இம்மாவட்டம் வங்காளதேசத்திற்கு நாடாளுமன்றத்திற்கு நான்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
மக்கள் தொகையியல்
தொகு3403.48 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் தற்காலிக மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 17,76,795bஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,84,069 ஆகவும், பெண்கள் 8,92,726 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 99 ஆண்ககளுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 522 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 43.2% ஆக உள்ளது.[3]
கல்வி
தொகுபோலா மாவட்டத்தில் மூன்று அரசுக் கல்லூரிகள் உள்ளது. [4] மேலும் போலா அரசு உயர்நிலைப் பள்ளி, போலா அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, தாளிகௌர் நகர் உயர்நிலைப் பள்ளி, கரீம் கஞ்ச் உயர்நிலைப் பள்ளி, புர்கானுத்தீன் அப்து ஜப்பார் கல்லூரி, புர்கானுத்தீன் மகளிர் கல்லூரி, புர்கானுத்தீன் கமில் மதராசா கல்லூரி, தௌத்கான் அபு அப்துல்லா பட்டப் படிப்பு கல்லூரி, போலா தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளது.
பிற தகவல்கள்
தொகுபோலா மாவட்டத்தில் மெக்னா ஆறு, தெதுலியா ஆறு இல்ஷா ஆறு, பொலியா ஆறு, ஷாபஜ்பூர் கால்வாய்கள் ஓடுகிறது.
இம்மாவட்டத்தில் நெல், சணல், உருளைக்கிழங்கு, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மிளகாய், நிலக்கடலை, கடுகு, வாழை, வெற்றிலை, பாக்கு முக்கியப் பயிர்கள் ஆகும். [5]
போலா தீவு சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Md Sakhaowat Hossain (2012). "Bhola District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ http://www.amardesh.com/zilla_bhola.php, Retrieved on 24-02-2011.
- ↑ Community Report Bhola Zila June 2012[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Dist, Bhola. "Bhola news". http://bholanews.com/. பார்த்த நாள்: 24 November 2016.
- ↑ Bhola District Information