குசராத்து ஆயுர்வேதப் பல்கலைக்கழகம்

குசராத்து ஆயுர்வேதப் பல்கலைக்கழகம் (Gujarat Ayurved University) என்பது இந்தியாவின் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள மாநில பல்கலைக்கழகமாகும். ஆயுர்வேத மருத்துவம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒரு கூட்டு வளாகத்தைக் கொண்டுள்ளது. இது 2020ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.[1]

குசராத்து ஆயுர்வேதப் பல்கலைக்கழகம்
வகைமாநிலப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1967
அமைவிடம், ,
வளாகம்பொது
இணையதளம்www.ayurveduniversity.edu.in

வரலாறு தொகு

இந்தியா விடுதலை பெற்றபின் ஏற்பட்ட மறுசீரமைப்புக் காரணமாகக் குசராத்தில் ஆயுர்வேத பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது குசராத்தின் ஜாம்நகரில் தலைமையகத்துடன் 1967இல் நிறுவப்பட்டது.[2]

நிறுவனங்கள் தொகு

இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் பின்வரும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.[3]

  • பன்னாட்டு ஆயுர்வேத ஆய்வு மையம்
  • ஆயுர்வேத தொடர் கல்வி பல்கலைக்கழகப் பள்ளி

ஆயுர்வேதம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொகு

2020ஆம் ஆண்டில் , ஆயுர்வேதம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்) பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டது. ஆயுர்வேதத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினை நிறுவ பின் வரும் நிறுவனங்கள் இந்நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.[4]

  • ஆயுர்வேத முதுகலை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
  • ஆயுர்வேத ஆராய்ச்சி பன்னாட்டு மையம்
  • ஸ்ரீகுலாப்குன்வெர்பா ஆயுர்வேத மகாவித்யாலயா
  • மகரிசி பதஞ்சலி யோகா இயற்கை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
  • இந்திய ஆயுர்வேத மருந்து அறிவியல் நிறுவனம்

மேற்கோள்கள் தொகு

  1. "PM Modi Inaugurates Ayurveda Research And Teaching Institute In Gujarat". NDTV.com.
  2. "History of University". Gujarat Ayurved University. பார்க்கப்பட்ட நாள் 4 July 2017.
  3. "About University". www.ayurveduniversity.edu.in. பார்க்கப்பட்ட நாள் 23 January 2018.
  4. "PM inaugurates Ayurveda research & teaching institute | India News - Times of India". The Times of India.