குசி கபீர்
குசி கபீர் (Khushi Kabir) என்பவர் வங்காளதேச சமூக சேவகர், பெண்ணியவாதி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகுசி கபீர் டாக்கா பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடத்தில் நுண்கலைகளில் (ஓவியம் மற்றும் வரைதல்) பட்டம் பெற்றார்.[2]
பணி
தொகு1972-ல், வங்காளதேச விடுதலைப் போருக்குப் பிறகு, குசி கபீர் வங்காளதேச அரசு சாரா அமைப்பில் சேர்ந்தார். இவர் வங்காளதேசத்தின் கிராமப்புறங்களில் ஒதுக்கப்பட்ட சமூகங்களுடன் பணிபுரிந்தார். இவர் அரசு சாரா உரிமைகள் அமைப்பான நிஜேரா கோரியில் ஒருங்கிணைப்பாளராகச் சேர்ந்தார். நிஜேரா கோரி வங்காளதேசத்தில் 237787 உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய அரசு சாரா அமைப்புகளில் ஒன்றாகும்.[2] இவர் பன்னாட்டு சிட்டகாங் மலைப்பாதை ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்.[3] இவர் கொள்கை உரையாடல் மையத்தின் இயக்குநராகவும் உள்ளார். வங்கதேசத்தில் 2013-ல் நூறு கோடியினர் கிளர்ச்சியினை ஒருங்கிணைத்தார்.[2]
குசி கபீர் வங்காளதேச தரைப்படை முகாம்கள் மற்றும் நிறுவல்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகப் கருத்துக்களைத் தெரிவித்தார்.[4] 2015-ல் ஜோன்டா மாவட்டம்-25 இன் 14வது இருபதாண்டு மண்டல மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[5] பிரதம மந்திரி சேக் அசீனாவிற்கு எதிராக தீங்கு விளைவித்ததற்காக இவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் சூன் 4, 2016 அன்று புகாரில் விவரக்குறிப்பு இல்லாததால் வழக்கு வங்காளதேச உயர் நீதிமன்றம் இந்த வழக்கினைத் தள்ளுபடி செய்தது.[6] பின்னர் 27 நவம்பர் 2017 அன்று கபீர், வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான மத அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பேசினார். மேலும் சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசாங்கம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.[7]கபீர் கையெழுத்திடப்பட்ட சிட்டகாங் மலைப்பாதை அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lee, Matilda. "Campaign Hero: Khushi Kabir, empowering Bangladesh's most vulnerable". The Ecologist (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.
- ↑ 2.0 2.1 2.2 "Khushi Kabir". One Billion Rising Revolution. 10 July 2013. பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.
- ↑ "Chittagong Hill Tracts: Indigenous Women Disproportionately Affected By Violence and Discrimination in Bangladesh". UNPO (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.
- ↑ "Call against land acquisition for army installations". Prothom Alo இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201030308/http://en.prothom-alo.com/bangladesh/news/56263/Call-against-land-acquisition-for-army. பார்த்த நாள்: 29 November 2017.
- ↑ "Empower women for a better world". The Daily Star. http://www.thedailystar.net/city/empower-women-better-world-1473739. பார்த்த நாள்: 29 November 2017.
- ↑ "Court dismisses case against Khushi Kabir for allegedly 'slandering' PM". Dhaka Tribune. http://www.dhakatribune.com/bangladesh/court/2017/06/04/defamation-case-against-khushi-kabir-dismissed/. பார்த்த நாள்: 29 November 2017.
- ↑ "Rights activists: Communal attacks increasing because of culture of impunity". Dhaka Tribune. http://www.dhakatribune.com/bangladesh/law-rights/2017/11/27/communal-attacks-culture-impunity/. பார்த்த நாள்: 29 November 2017.
- ↑ "Govts cool on its full execution". The Daily Star. http://www.thedailystar.net/city/govts-cool-its-full-execution-1496572. பார்த்த நாள்: 29 November 2017.