நூறு கோடியினர் கிளர்ச்சி
ஒன் பில்லியன் ரைசிங் (One Billion Rising) அல்லது நூறுகோடியினர் கிளர்ச்சி பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் இயக்கமாகும்.[1][2][3] பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை நிறுத்தவும் பாலின சமத்துவம் மற்றும் நீதிக்காகவும் இந்த இயக்கம் போராடுகிறது. பெண்களில் மூன்றில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பாலியல் வன்முறை அல்லது வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர் என்ற புள்ளிவிவரத்தின் அடிப்படையில் உலகளவில் நூறுகோடி பெண்கள் தாக்கமுறுவதான கருதுகோளின் அடிப்படையில் இந்த இயக்கம் பெயரிடப்பட்டுள்ளது.[4]
முக்கிய நபர்கள் | ஈவ் என்சுலர் |
---|---|
வலைத்தளம் | onebillionrising.org |
இந்த இயக்கம் நாடகாசிரியரும் செயல்வீரருமான ஈவ் என்சுலர் என்ற பெண்மணியால் துவக்கப்பட்டது. இவர் த வஜினா மோனோலோக்சு என்ற நாடகத்திற்காகவும் வி-டே என்ற அமைப்பிற்காகவும் அறியப்படுகிறார்.[5] ஐக்கிய அமெரிக்கத் தேர்தல்களின்போது டோட் அகின் என்ற வேட்பாளரின் 'சட்டபூர்வ பாலியல் வன்முறை' மற்றும் கருத்தரித்தல் குறித்த சர்ச்சைக்குள்ளான கருத்துக்கள் இந்த இயக்கத்திற்கு தூண்டுதலாக அமைந்தது. உண்மையான பாலியல் வன்முறையால் கருத்தரிப்பு ஏற்படுவதில்லை என்பன போன்ற கருத்துக்களால் கோபமுற்ற என்சுலர் அனைவரும் காணக்கூடிய கடிதம் ஒன்றை எழுதினார்.[6]
இந்த இயக்கத்தில் 5,000 அமைப்புகள் இணைந்துள்ளன; இந்த அமைப்புக்கள் பல சமய அமைப்புக்கள், சமூக இயக்க செயல்வீரர்கள், நடிகர்கள்,[7][8] பெண்ணிய அரசியல்வாதிகள் போன்றோரால் ஆதரவும் சிபாரிசும் அளிக்கப்பட்டுள்ளன.[9]
செப்டம்பர் 20, 2012இல் 160 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த இயக்கத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.[10]
பெப்ரவரி 14, 2013 அன்று 190 நாடுகளுக்கும் மேலாக பேரணிகள் நடத்தப்பட்டன.[11] அன்றைய நாளில் உலகெங்கும் நூறுகோடி பெண்கள் தங்கள் வலிமையைக் காட்டும் விதமாக இணைந்து ஆடுவதற்கு அறைகூவல் விடப்பட்டது.[12] இந்த நாள் என்சுலரின் வி-டே அமைப்பின் 15வது ஆண்டுவிழா நாளாகவும் அமைந்திருந்தது.[13]
சான்றுகோள்கள்
தொகு- ↑ "V-Day: One Billion Rising". Huffingtonpost.com. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
- ↑ "Celebrating five years of women moaning | Antigua Observer Newspaper". Antiguaobserver.com. 2012-04-27. Archived from the original on 2018-07-02. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
- ↑ "'This is not a women's issue, it's a global crisis': Robert Redford - video | Society | guardian.co.uk". Guardian. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
- ↑ "Features". Oxyweekly.com. 2012-02-21. Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
- ↑ "Capital News » African gender activists meet in Kenya over violence". Capitalfm.co.ke. 1931-11-07. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
- ↑ "One Billion Rising: Eve Ensler, Activists Worldwide Plan Global Strike to End Violence Against Women". Democracynow.org. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
- ↑ Martinson, Jane (2007-09-28). "Join the One Billion Rising campaign to end violence against women | Society". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
- ↑ "Una campagna contro la violenza sulle donne mondiale". ilJournal.it. 2012-09-09. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
- ↑ Rosamund Urwin (2012-09-07). "'The misogynist abuse MPs receive is shocking – you should see the tweets I get' - Politics - News - Evening Standard". Standard.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
- ↑ "News in Nepal: Fast, Full & Factual". Myrepublica.Com. 2012-09-20. Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
- ↑ Kyivans join global rally to end violence against women, Kyiv Post (14 February 2013)
- ↑ "Fit for the King » FUNFARE with Ricardo F. Lo | Entertainment » Exclusive". philstar.com. Archived from the original on 2017-10-04. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
- ↑ Coastweek Kenya (2012-09-06). "coastweek.com". coastweek.com. Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
வெளி இணைப்புகள்
தொகு- அலுவல்முறை வலைத்தளம்
- List of cooperating organizations பரணிடப்பட்டது 2012-10-10 at the வந்தவழி இயந்திரம்
- Endorsement video message by Robert Redford at the தி கார்டியன் newspaper website
- September 24, 2012 video interview with Eve Ensler at Democracy Now!
- February 14, 2013 video interview with Eve Ensler at Democracy Now!