குடந்தை சோதிடர் (கதைமாந்தர்)
பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
குடந்தை சோதிடர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோதிட நிபுணர் ஆவார். பல்வேறு நாட்டின் அரச குமாரர்கள், அரச குமாரிகளின் சிதகங்களை சேர்த்து வைத்திருப்பவர். பழையாறை இளவரசி குந்தவை பிராட்டியும், கொடும்பாளூர் இளவரசி வானதி தேவியும் அடிக்கடி சோதிடம் பார்க்க குடந்தை சோதிடரின் வீட்டிற்கு வருகை தருகிறார்கள். அவ்வாறு வருகையில் வந்தியத் தேவன் குந்தவையை முதன்முறை சந்திக்கிறான்.
குடந்தை சோதிடர் | |
---|---|
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர் | |
உருவாக்கியவர் | கல்கி |
வரைந்தவர்(கள்) | மணியம், வினு, மணியம் செல்வன் |
தகவல் | |
தொழில் | சோதிட வல்லுனர் |
மதம் | சைவம் |
தேசிய இனம் | சோழ நாடு |
சோழப் பேரரசின் மதிமந்திரியான அநிருத்தப் பிரம்மராயரின் ஒற்றனாகவும் அறியப்படுகிறார். அரசாங்க விசயங்களை தன்னுடைய பேச்சாற்றலால் பிறரிடமிருந்து அறிந்து அநிருத்தரிடம் சொல்வதாக பாண்டிய ஆபத்துதவிகள் நம்புகின்றார்கள்.
வெளி இணைப்புகள்
தொகு- அநிருத்தப் பிரம்மராயர் தொடர்பான பதிவு பரணிடப்பட்டது 2012-10-17 at the வந்தவழி இயந்திரம்