குடவாயிற் கோட்டம்
குடவாயிற் கோட்டம் என்னும் ஊரில் சிறைச்சாலை ஒன்று இருந்தது.
சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும், சோழன் செங்கணானுக்கும் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் போர் நடைபெற்றது.
போரில் கணைக்கால் இரும்பொறை சிறைபிடிக்கப்பட்டான்.
குடவாயிற் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டான்.
சிறையில் இருந்தபோது தாகத்துக்குத் தண்ணீர் கேட்டான்.
காவலர் சற்றே காலம் தாழ்த்திக் கொண்டுவந்து கொடுத்தனர்.
இதனைப் பொறுக்காத சேரன் அந்தத் தண்ணீரைப் பருகாமலேயே பாடல் என்றைப் பாடிவிட்டுத் தன் உயிரை விட்டுவிட்டான்.
இவன் அடைக்கப்பட்டிருந்த சிறை குடவாயில் எனப்பட்ட குடவாசல் ஊரில் இருந்ததாகவும், உறையூரின் மேற்குப் பகுதியில் இருந்ததாகவும் கருதும் இருவேறு கருத்துக்கள் நிலவிவருகின்றன. [1]
இவ்வூரில் கோச்செங்கணான் கட்டியதாகச் சொல்லப்படும் மாடக்கோயில் பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம் ஒன்று உள்ளது.
அடிக்குறிப்பு
தொகு- ↑ புறநானூறு 74